நான்கு சக்கர வாகன விற்பனை 2023ல் புதிய உச்சம்!
2023 ஆம் ஆண்டு நான்கு சக்கர பயணிகள் வாகன விற்பனை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
2023 ஆம் ஆண்டு வாகன விற்பனையில் முன்னேற்றம் கண்ட ஆண்டாக திகழ்கிறது. உலக பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்ட பொழுதும் இந்திய பொருளாதாரத்தின் நிலைத்தன்மை காரணமாக இந்தியாவில் உள்நாட்டு வாகன விற்பனை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. இது வளர்ந்த நாடுகளை காட்டிலும் வாகன விற்பனையில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றத்தை காட்டுகிறது.
இவ்வாறு 2023 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு வாகன விற்பனை 8.3 சதவீதம் உயர்வைக் கண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக விலை உயர்ந்த ஃபார்ச்சூனர், ஆடி, பிஎம்டபிள்யூ மற்ற வகை கார்களின் உடைய விற்பனையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமான ஹூண்டாய், மாருதி, டொயோட்டா, டாடா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான கார்களை விற்பனை செய்து பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன. இவ்வாறு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2022 ஆம் ஆண்டு 37.92 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் 2023 ஆம் ஆண்டு 41.08 லட்சம் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.
குறிப்பாக ஹூண்டாய் நிறுவனம் 6 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்திருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனம் 20 லட்சத்திற்கும் அதிகமாக கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது மிகப் பெரிய விற்பனை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. டோயோட்டோ நிறுவனம் 2.33 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.
டாடா நிறுவனம் பொருளாதார ரீதியா 4.7 சதவீதம் வளர்ச்சியை கண்டறிகிறது. இது மட்டுமல்லாமல் மின்சார வகை காரர்களுடைய விற்பனையும் இந்தியாவில் பெருமளவில் உயர்ந்திருக்கிறது. இவ்வாறு 2022 ஆம் ஆண்டு விட 2023 ஆம் ஆண்டில் 48 சதவீதம் விற்பனை உயர்ந்து இருக்கிறது.
இவ்வாறு 2022 ஆம் ஆண்டு 10.25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், 2023 ஆம் ஆண்டு 15. 26 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகி புதிய உச்சம் தொட்டு இருக்கிறது.