உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாடு பல்வேறு வகைகளில் பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் வளர்ச்சியை காண இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய இரு நாட்கள் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் பல்வேறு விதமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
புதிய தொழில் நிறுவனங்கள் பல தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்புக் கொண்டிருப்பதன் மூலம் அதிகப்படியான முதலீடுகள் தமிழ்நாட்டில் நோக்கி வர இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வர்த்தகம், வியாபாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவை மேலும் வலுப்பெறும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் நிலவும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான வேலையில்லா திண்டாட்டம் குறையும்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இதன் மூலம் நேரடியாக 14,54,712 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. மேலும் மறைமுகமாக 12, 35, 945 வேலை வாய்ப்புகள் உருவாகும்.
ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளை தொழில்வாரியாக பார்க்கும் பொழுது, தொழில் துறை மற்றும் வர்த்தகத்தில் 3,79, 809 ரூபாய் காண முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆற்றல் உற்பத்தி துறையில் 1,35,557 கோடி ரூபாய்க்கும், வீட்டு வசதி மற்றும் நகர் புற மேம்பாட்டு துறையில் 62,939 கோடி ரூபாய்க்கும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களில் 63, 573 கோடி ரூபாய்க்கும், ஐ டி மற்றும் டிஜிட்டல் துறைகளை பொருத்தவரை 22,130 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கின்றன. ஈர்க்கப்பட்ட முதலீடுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் உடைய பொருளாதார நிலை மேலும் வலுவடையும்.