கோல்ட் ஃபியூச்சர்ஸ் (Gold Futures) என்பது எதிர்கால தேதியில் ஒரு குறிப்பிட்ட விலையில் தங்கத்தை வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ ஒரு ஒப்பந்தமாகும். இது ஒரு முதலீட்டு பொருளாகவும், ஊக முதலீடாகவும் பயன்படுத்தப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு தங்க சந்தையில் சிறிய மூலதனத்துடன் பெரிய ஒப்பந்தங்களில் பங்கேற்கவும், விலை மாற்றங்களில் இருந்து லாபத்தை ஈட்டவும் வாய்ப்பளிக்கிறது. இருந்தாலும் இதில் சில கணிசமான இடர்பாடுகள் உள்ளன. எனவே இது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதல்ல.
gold Futures முதலீட்டாளர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?
* முதலீட்டாளர்கள் தங்கத்தின் எதிர்கால விலைகளை ஊகித்து, விலை குறையும் பொழுது விற்கவும், விலை அதிகரிக்கும் போது வாங்கவும் முடியும்.
* இவை பங்குச்சந்தை மற்றும் பிற சொத்துக்களுடன் தொடர்பற்றவையாக இருப்பதால், போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.
* சிறிய தொகையுடன் தங்க சந்தையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் பெரிய நிலையை அடைவதற்கு உதவும்.
* பெரிய அளவிலான ஒப்பந்தங்களை எடுக்கவும், குறைந்த ஆபத்துடன் விநியோகத்தை தவிர்க்கவும் உதவுகிறது.
* பொருளாதார மந்தநிலைகள், நிதி நெருக்கடிகள் அல்லது அரசியல் பாதுகாப்பின்மை போன்ற காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. இது போன்ற சமயங்களில் தங்கத்தின் மதிப்பு உயரும். இது முதலீட்டாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.
* குறைந்த முதலீட்டில் லாபமும், கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படுவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை வைத்திருக்காமலேயே விலை நகர்வுகளிலிருந்து பயனடையலாம்.
Gold Futures ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் கவனிக்க வேண்டியவை:
* கோல்ட் ஃபியூச்சர்ஸ் வர்த்தகம் கணிசமான இடர்பாடுகளைக் கொண்டுள்ளது. இது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதல்ல. இதன் கணிக்க முடியாத தன்மை காரணமாக அதாவது எதிர்காலம் கணிக்கப்படாதது என்பதால் விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பணம் ஆபத்துக்குள்ளாகலாம்.
* இதில் முதலீடு செய்வோர், தங்கத்தின் ஸ்பாட் விலை, அந்நிய முதலீடு (leveraging) மற்றும் மார்ஜின் தேவைகள், ஒப்பந்த காலாவதி மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தரகர்கள் மூலம் வர்த்தகம் செய்தல் போன்ற அம்சங்களை கவனிக்க வேண்டும்.
* கோல்ட் ஃபியூச்சர்ஸ் ஒரு பரிவர்த்தனைக்கான 'ஆன்-எக்ஸ்சேஞ்ச்' சந்தையாகும். அங்கு பெரிய தொழில்முறை வர்த்தகர்கள் ஒப்பந்த விதிமுறைகளை நேரடியாக வர்த்தகம் செய்கிறார்கள். இந்த வர்த்தகத்தின் நோக்கம் முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை உயர்விலிருந்து லாபம் ஈட்டுவதற்கு இதனை பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் கோல்ட் ஃபியூச்சர்ஸ் வர்த்தகம்:
இந்தியாவில் MCX போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யவும். MCXல் தங்கம் எதிர்காலங்களில் வர்த்தகம் செய்ய கமாடிட்டி கணக்கு தேவைப்படும்.
ஏற்கனவே ஈக்விட்டி வர்த்தகக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் புரோக்கரிடம் கமாடிட்டி பிரிவை சேர்க்கலாம். ஈக்விட்டி வர்த்தகக் கணக்கு இல்லாதவர்கள் தங்க எதிர்கால சந்தைகளில் வர்த்தகம் செய்வதற்கு,MCX(Multi Commodity Exchange of India)ல் பதிவு செய்யப்பட்ட ஒரு புரோக்கரிடம் கமாடிட்டி கணக்கை திறக்க வேண்டும்.