சரியாகப் பயன்படுத்தினால் செம பலன்: கிரெடிட் கார்டின் இரகசிய நன்மைகள்!

Benefits of Credit Cards.
Benefits of Credit Cards.
Published on

கிரெடிட் கார்டு (credit card) என்றவுடன் சிலர் அச்சப்படுவதையும், சிலர் மகிழ்ச்சி அடைவதையும் பார்த்திருப்போம். அதற்கு காரணம் கிரெடிட் கார்டை பயன்படுத்தத் தெரிந்தவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆம், கிரெடிட் கார்டுகள் கடனாளியாக்கும் கார்டுகள் மட்டுமல்ல பல்வேறு வகையான சலுகைகளை கொண்ட கார்டுகளும் ஆகும். அவற்றை சரியாக கையாள விட்டால் பெரிய தொகையை வட்டியாக இழக்க நேரிடும், அதோடு பல்வேறு விதமான வாய்ப்புகளும் தடைபடும்.

இவ்வாறு கலவையான விமர்சனங்களை கொண்டுள்ள கிரெடிட் கார்டில் (credit card) பல்வேறு விதமான ரொக்கச் சலுகைகள் வழங்கப்படுகிறது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

கிரெடிட் கார்டுகள் பல்வேறு வகையிலான தன்மை கொண்டவை. இதை தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம்.

மேலும் கிரெடிட் கார்டுகளை (credit card) பொறுத்தவரை பல்வேறு விதமான பயன்கள், சலுகைகள், வட்டி வீதம், செலவு செய்யும் தொகை என்று மாற்றங்களை உள்ளடக்கியது. இதனால் கிரெடிட் கார்டை வாங்க விரும்பும் நபர் தங்களுக்கு தேவையான, எந்த வகை செலவிற்கு பயன்படுத்த போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிந்து கிரெடிட் கார்டை வாங்க வேண்டும்.

இப்படி சரியான கார்டை தேர்வு செய்வதன் மூலம் நிர்பந்தங்கள் குறைவதோடு, கூடுதல் சலுகையையும் பெற முடியும். மேலும் கிரெடிட் கார்டு வாங்குபவர்கள் ஆண்டு கட்டணம் குறித்து கவனம் செலுத்த வேண்டும், இது செலவை குறைக்கும்.

நேர மேலாண்மை மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்த தேதியில் கிரெடிட் கார்டிற்கு ரொக்கம் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறதோ அதற்கு முன்பாக ரொக்கத்தை செலுத்துவது அதிக அளவிலான வட்டியை தடுக்கும். மேலும் கூடுதல் சலுகைகள் கிடைக்க வழிவகுக்கும்.

மேலும் சரியாக கிரெடிட் கார்டை பராமரிப்பவர்களுக்கு புள்ளிகள் எனப்படும் குறியீடுகள் வழங்கப்படும். இவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புள்ளிகள் சரியாக வரவில்லை என்றால், அது பலன் இழப்பை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
RBI-ன் அடுத்த சர்ப்ரைஸ்! தொடர்ந்து 4-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு!மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!
Benefits of Credit Cards.

சரியாக இருக்கும் பட்சத்தில் பரிசு புள்ளி கிடைக்கும். இது ரொக்கத்தோடு சேர்த்தால் மேலும் பலன் தரும். மேலும் இவ்வாறான பரிசு புள்ளிகளை மளிகை மற்றும் எரிபொருள்களுக்கு பயன்படுத்தினால் செலவு மேலும் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com