
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பரில்தான் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று அறியப்படுகிறது
ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்தச் செயலைத் தொடர்ந்து, பல வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்புள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்த போதிலும், பல வங்கிகள் இன்னும் இந்த பலனை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு அதன் முழுப்பலனையும் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வங்கிகளை அணுகி, வட்டி குறைப்பின் பலனைப் பெற வேண்டும். இல்லையெனில், கடன் சுமை குறையாமல் போகலாம். வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் எதைக் குறைக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தேர்வாக இருக்க முடியும். கடன் வாங்குபவர்களின் விருப்பம் இல்லாமல்,bஇது சார்ந்து வங்கிகள் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.
சில வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தைக் கேட்டு செயல்படுகின்றன. ஆனால், சில வங்கிகள் இன்னும் இந்தத் தெரிவை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. நமது வங்கி EMIயையோ அல்லது கடன் செலுத்தும் காலத்தையோ குறைக்காத பட்சத்தில், கடன் உள்ள வங்கிக் கிளையில் ஒரு கடிதம் எழுதி, நமக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியை வாடிக்கையாளர்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.
மொத்தத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த தொடர் ரெப்போ விகிதக் குறைப்பு, வீடு மற்றும் சிறு வணிகக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். வங்கிகள் இந்த பலனை முழுமையாகச் செயல்படுத்தும்போது, கடன் வாங்கியவர்களுக்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணைச்சுமை வெகுவாகக் குறையும் வாய்ப்பு உள்ளது.
25 அடிப்படைப் புள்ளிகள் (BPS) ரெப்போ விகிதக் குறைப்பு செய்யப்படுவது ரிசர்வ் வங்கிக்குச் சிறந்த வழி என SBI அறிக்கை பரிந்துரைக்கிறது. இதனால், அடுத்த மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 25 BPS ரெப்போ விகிதக் குறைப்பை அறிவிக்கலாம். 2025 ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்ற முந்தைய கூட்டத்தில், ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக 25 BPS குறைக்கப்பட்டது. SBI அறிக்கை பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாலும், மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன என SBI அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இந்த நான்காவது குறைப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.