இது தான் விஷயமா? பல ஆண்டுகள் கடந்தும் மாறாத பிஸ்கட் விலை!

Parle-G
Parle-G
Published on

பெரும்பாலான மக்களுக்கு மழை, வெள்ளம், ஊரடங்கு போன்ற காலங்களில் எளிதாகவும், விலைக்குறைவாகவும் கிடைத்த உணவுப்பொருள் Parle-G பிஸ்கட். முக்கியமாக 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஸ்நாக்ஸ் என்றால் அது Parle-G பிஸ்கட் தான். இவ்வாறு இந்திய மக்களின் உணவிலும், உணர்விலும் கலந்த Parle-G பிஸ்கட் விலையிலும், சுவையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சந்தையில் பல பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்து, மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க சிரமப்படும் நிலையில் Parle-G பிஸ்கட் மட்டும் எவ்வாறு ஒரே விலையில் விற்கப்படுகிறது என்று யோசித்து உள்ளீர்களா? நாம் இந்த பதிவில் பல ஆண்டுகளாக எவ்வாறு  Parle-G பிஸ்கட் ஒரே விலையில் விற்கப்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

Parle-G பிஸ்கட் வரலாறு:

பார்லே நிறுவனம் முதன் முதலில் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனமாக 1929 இல் நிறுவப்பட்டது. மும்பையை மையமாகக் கொண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் பார்லே தயாரிப்புகள் என்ற பெயரில் 1939 முதல் பிஸ்கட் தயாரிக்க தொடங்கியது. 

அப்போது இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் பார்லேவின் தயாரிப்புகள் இந்திய மக்களிடையே பிரபலமாக இல்லை. 

சுதந்திரத்திற்குப் பிறகு 1980 ஆம் ஆண்டு முதல் பார்லே குளுக்கோ பிஸ்கட் என மக்களிடையே பிரபலமானது. பார்லே குளுக்கோ பிஸ்கட் பெரியவர்கள் மட்டும் வாங்கி சாப்பிடும் பிஸ்கட்டாக இருந்த நிலையில், பார்லே குளுக்கோ என்னும் பெயரை Parle-G என மாற்றப்பட்டு இளைஞர்களிடம் பிரபலமடைந்தது. இதில் ஜி என்றால் ஜீனியஸ் என்பது பொருளாகும். 

இந்தியாவில் FMCG (அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள்) பிராண்டுகளில் Parle-G நம்பர் 1 இடத்தில் உள்ளது. மேலும் 2013 ஆம் ஆண்டு சில்லரை வர்த்தகத்தில் ரூ.5000 கோடி வருவாய் ஈட்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையை Parle-G பெற்றது. 

இதையும் படியுங்கள்:
வியாபாரம் பண்ணறீங்களா? இந்த மந்திர தந்திரமெல்லாம் ரொம்ப முக்கியமுங்க!
Parle-G

Parle-G பிஸ்கட்டில் உள்ள ட்ரிக்:

கடந்த 1994 ஆம் ஆண்டு Parle-G பிஸ்கட்டை ரூ.4க்கு இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ.1 மட்டும் உயர்த்தி ரூ.5க்கு தற்போது வரை விற்பனை செய்து வருகிறது.

ஆரம்பத்தில் Parle-G பிஸ்கட் அளவு 100 கிராம் இருந்தது. பிறகு 92.5 கிராம் என்றும், பின்னர் 88 கிராமாக மாறியது. ஆனால் தற்போது ரூ.5 விற்கப்படும் Parle-G பிஸ்கட் 55 கிராம் ஆக உள்ளது. 

இதையும் படியுங்கள்:
முதலீட்டைத் தள்ளிப்போடுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத் தான்!
Parle-G

எனவே Parle-G பிஸ்கட்டின் விலையை மாற்றாமல், சுவையையும் குறைக்காமல் அதன் அளவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நுகர்வோர்கள் பெரிய அளவில் உணர மாட்டார்கள் என்பதால் உலகம் முழுவதும் உள்ள சில நிறுவனங்கள் இந்த ட்ரிக்கை கடைப்பிடித்து வருகின்றன. இந்த நுட்பத்திற்கு Graceful Degradation என்று பெயர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com