நகைக் கடையில் உங்களை ஏமாற்றும் 5 விஷயங்கள்: தங்க நகை பில்லைச் சரிபார்ப்பது எப்படி?

இனி ஒரு ரூபாய் கூட அதிகமாகத் தராதீர்கள்; தங்கம் வாங்குபவர்கள்.
தங்க நகை - Jewellery Hidden Charges
தங்க நகை - Jewellery Hidden Charges
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. நகைக் கடைக்கு சென்று நகைகள் வாங்கும்போது கடைக்காரர்கள் போடும் கணக்கு பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கும். பெரும்பாலும் நாம் அன்றைய தங்கம் விலையை மட்டும் பார்த்துவிட்டு செல்வோமே தவிர, பில் போடும்பொழுது வரும் கூடுதல் தொகையைப் பார்த்து அதிர்ச்சி அடையத்தான் செய்வோம்.

இந்த கூடுதல் தொகை எதனால் வசூலிக்கப்படுகிறது மற்றும் சரியான கணக்கீடு எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் கடமையாகும்.

தங்க நகை வாங்கும்பொழுது ஏமாறாமல் இருக்க பில்லில் சேர்க்கப்படும் இந்த 5 மறைமுகக் கட்டணங்களைப் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். செய்கூலி, சேதாரம், கல் எடை ஏமாற்று, ஜிஎஸ்டி மற்றும் ஹால்மார்க் கட்டணம் போன்ற மறைமுகக் கட்டணங்கள் மூலம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றைத் தெளிவாக புரிந்துகொண்டு பில்லை சரி பார்ப்பது அவசியம் ஆகும்.

சேதாரக் கட்டணம் (Wastage Charges):

ஒரு நகையை செய்யும்போது தங்கம் உருக்கப்பட்டு செதுக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை சேதாரம் என்கிறார்கள். நகைகள் செய்யும்போது தங்கம் வீணாகிறது என்ற பெயரில் சேதாரம் சேர்க்கப்படுகிறது. பொதுவாக 8% முதல் 18% வரை சேதாரம் கணக்கிடுவார்கள்.

இப்போது நவீன இயந்திரங்கள் மூலம் நகைகள் செய்யப்படுவதால் சேதாரம் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் சில கடைகளில் அதிகப்படியான சேதாரம் விதிக்கப்படுகிறது. எனவே அதிக சேதாரம் போடும் கடைகளில் கவனமாக இருக்க வேண்டும். எளிய டிசைன்களுக்கு சேதாரம் குறைவாக இருக்கும். அதை பேரம் பேசி குறைக்கலாம்.

தங்க நகை - Jewellery Hidden Charges
தங்க நகை - Jewellery Hidden Charges

செய்கூலி (Making Charges):

நகை வடிவமைப்பு மற்றும் கைவேலைப்பாடுகளுக்கு இந்த கூலி வசூலிக்கப்படுகிறது. இது நகையின் எடையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக (percentage) கணக்கிடப்படும். ஒவ்வொரு கடைக்கும், நகை வடிவமைப்புக்கும் ஏற்ப இது மாறுபடும். சில கடைகள் 'ஜீரோ மேக்கிங் சார்ஜ்' என்று கூறிவிட்டு தங்கத்தின் விலையையோ அல்லது சேதாரத்தையோ கூட்டி ஏமாற்றுவார்கள்.

நகையின் கிராமுக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்படும் செய்கூலியை முன்கூட்டியே கேட்டுத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் வாங்குவதற்கு முன்பு செய்கூலி எவ்வளவு என்று கேட்டு பேரம் பேசலாம்.

கல் மற்றும் முத்துக்களின் எடை (Stone Weight Price):

ஜிமிக்கி, மாணிக்கம் அல்லது வைரம் பதித்த நகைகளில், கற்களின் எடையையும் சேர்த்து மொத்த தங்கத்தின் எடையாகக் கணக்கிட்டு ஏமாற்றுவதுண்டு. நகையில் கற்கள் அல்லது முத்துக்கள் இருந்தால் அதன் எடையையும் தங்கத்தின் விலையிலேயே கணக்கிடுவார்கள். கற்கள் பதித்த நகைகளை வாங்கும்போது மொத்த எடையிலிருந்து கல்லின் எடையைக் குறைக்க வேண்டும். பல கடைகள் கல்லுக்கும் சேர்த்து தங்கத்தின் விலையை முழுமையாக வசூலிப்பார்கள்.

பில்லில் தங்கத்தின் எடை தனித்தனியாகவும், கற்களின் எடை மற்றும் விலை தனித்தனியாகப் பிரித்து எழுதப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்னாளில் அந்த நகையை விற்கும்பொழுது கற்களின் எடைக்கு மதிப்பு இருக்காது என்பதை மறக்கவேண்டாம்.

இதையும் படியுங்கள்:
அடப்பாவமே.. நகை எக்ஸ்சேஞ்ச் பண்ணா இவ்ளோ பெரிய ஆப்பா.. உஷார் மக்களே!
தங்க நகை - Jewellery Hidden Charges

ஜிஎஸ்டி (GST Tax - 3%):

தங்கத்தின் அடிப்படை விலை, செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவை சேர்ந்த மொத்த தொகைக்கு 3% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. சில சிறிய கடைகள் பில் தராமல் வரியை மறைக்க முயல்வதும், முறையற்ற கணக்கு காட்டுவதும் உண்டு.

எனவே தங்க நகை வாங்கும்பொழுது மொத்த விலையில் 3% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது தவிர செய்கூலி மற்றும் சேதாரத்திற்கும் தனியாக வரி கணக்கிடப் படலாம். பில்லில் வரி சரியாக கணக்கிடப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவும்.

ஹால்மார்க் மற்றும் எச்யுஐடி கட்டணம் (Hallmark & HUID Fee):

பிஐஎஸ் (BIS) முத்திரை மற்றும் எச்யுஐடி (HUID) குறியீட்டுக்காக சிறிய அளவில் கட்டணம் அல்லது பரிசோதனைச் செலவு பில்லில் சேர்க்கப்படும். இது நகையின் தூய்மைக்கான அரசாங்க உத்தரவாதம் என்றாலும், இதற்குரிய நியாயமான கட்டணம் மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். சில கடைகளில் இந்தக் கட்டணத்தை மிக அதிகமாகக் காட்டி ஏமாற்ற வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
24K முதல் 9K வரை: உங்களுக்கு ஏற்ற தங்க நகை எது? தவறாமல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!
தங்க நகை - Jewellery Hidden Charges

தங்கத்தின் தூய்மை மற்றும் சரியான எடையை உறுதிசெய்வதோடு மட்டுமல்லாமல், தேவையற்ற எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றி நியாயமான விலையில் நகைகளை வாங்கும் விழிப்புணர்வை நீங்கள் பெறுவீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com