இன்றைய காலத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால தேவைகளுக்காக பணத்தை சேமிப்பது மிகவும் அவசியம். நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்காமல் செலவு செய்தால் ஒருநாள் கையில் பணம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படலாம். எனவே நம் சம்பளத்தில் ஒரு பகுதியை மாதா மாதம் எப்படி சேமிக்கலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நம்முடைய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சம்பாதித்த பணத்தை முழுமையாக செலவு செய்யாமல் எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பது ஒரு நல்ல பழக்கம். எதிர்பாராத செலவுகள், ஓய்வு கால செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவுகள் போன்றவற்றை சமாளிக்க சேமிப்பு மிகவும் முக்கியமானது.
பணத்தை சேமிக்கும் யுக்திகள்:
முதலில் உங்கள் மாதாந்திர வருமானம் மற்றும் செலவுகளை ஒரு பட்டியலில் எழுதுங்கள். இதன் மூலம் எவ்வளவு பணம் மிச்சப்படுகிறது என்பதை நீங்கள் கணக்கிட முடியும். பின்னர் உணவு, போக்குவரத்து, பொழுதுபோக்கு போன்றவற்றில் எவ்வளவு பணத்தை தேவையின்றி செலவழிக்கிறீர்கள் என்பதைக் கண்டறிந்து, அவற்றை குறைக்க முயற்சிக்கவும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்று ஒரு இலக்கை நிர்ணயித்து, மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றால், ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன் ஒரு குறிப்பிட்ட தொகை தானாகவே மற்றொரு சேமிப்பு கணக்கிற்கு செல்லும்படி ஆட்டோமேஷன் செய்யுங்கள்.
உங்களது சேமிப்பு இலக்குகளை அடைய, அதற்காகவே இருக்கும் சேமிப்பு அம்சங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் முதலீடு செய்யுங்கள்.
பிரபலமான சில சேமிப்பு அம்சங்கள்:
உங்களது பணத்தை முதலீடு செய்யத் தெரியவில்லை என்றால் சேமிப்பு கணக்குகளில் பத்திரமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், பணத்தை சேமிப்பதற்கான ஒரு எளிய வழியாகும்.
கையில் மொத்தமாக ஒரு தொகையை வைத்திருந்தால் அதை பிக்சட் டெபாசிட் செய்து 6% முதல் 8% வட்டி பெறலாம். அல்லது அரசாங்கத்தால் வழங்கப்படும் PPF கணக்குகளில் உங்களது நீண்ட கால தேவைக்கு பணத்தை சேமிக்க முடியும். குறிப்பாக, இதற்கு வரிவிலக்கு உள்ளது என்பதால், உங்களுக்கு வட்டியாக கிடைக்கும் பணத்திற்கு வரி கட்ட வேண்டிய அவசியமில்லை.
இறுதியாக உங்களுக்கு பங்குச்சந்தை பற்றி நன்றாகத் தெரியும் என்றால், ரிஸ்க் அதிகம் இல்லாத மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டலாம்.
மேலே, குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு மாதமும், உங்களது எதிர்காலத் தேவைக்கு பணத்தை நீங்கள் எளிதாக சேமிக்க முடியும். சம்பளத்தில் இருந்து பணத்தை சேமிப்பது ஒரு நல்ல பழக்கமாகும். இவ்வாறு நீங்கள் செய்யும் சிறிய சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்காதீர்கள்.