ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் எப்படி இருக்கும் ? விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

IPL 2024
IPL 2024

பிஎல் 2024 மினி ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் மூலம் அணிகள் அடைந்திருக்க கூடிய லாபம் பற்றி பார்ப்போம்.

ஐபிஎல் 2024 மினி ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் மூலம் அணிகள் அடைந்திருக்க கூடிய லாபம் பற்றி பார்ப்போம்.

ஐபிஎல் தொடரில் மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதனையொட்டி அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. வழக்கமாக தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியான பின், வீரர்களை மாற்றி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான டிரேடிங் முடிவுக்கு வரும். அதன்பின் எந்த வீரராக இருந்தாலும் ஏலத்தில்தான் வாங்க முடியும்.

IPL Players
IPL Players

டிரேடிங் முறை ஒப்பந்தம் செய்வதற்கான கடைசி நாளாக டிசம்பர் 12ஆம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதனால் ஏராளமான வீரர்களை பல்வேறு அணிகளும் டிரேடிங் செய்ய முயற்சிப்பார்கள்.

அதேசமயம் ஐபிஎல் 2024 போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல்.

இவ்வாறு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஸ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கல் பிரேஸ்வெல், டேவிட் வில்லே, வெய்ன் பர்னல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கௌல், கேதார் ஜாதவ் ஆகிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாவது ஏன் தெரியுமா?
IPL 2024

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து பனுகா ராஜபட்சே, மோஹித் ரதி, பால்தேஜ் தண்டா, ராஜ் அங்கத் பவா, ஷாருக் கான் ஆகியோரும். தில்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து மணீஷ் பாண்டே, சர்ஃப்ராஸ் கான், ரீலி ரூசோ, ரிப்பல் படேல், ரோவ்மன் படேல், அமன் கான், பிரியம் கார்க், சேட்டன் சக்காரியா, முஸ்தபிசூர் ரஹ்மான், பில் சால்ட், கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தும் சில வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார். அதே சமயம் பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிடோரியஸ், அம்பத்தி ராயுடு, சிசண்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோரும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டேவிட் விசே ஆர்யா தேசாய், என்.ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷர்துல் தாக்குர், லோகி ஃபெர்க்யூசன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஜான்சன் சார்லஸ் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து ஹாரி ப்ரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் ஷர்மா, அகீல் ஹொசைன், அடில் ரஷீத் அகியோரும். லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து டேனியல் சாம்ஸ், கருண் நாயர், ஜெயதேவ் உனத்கட், மனன் வோரா, கரண் சர்மா, சூர்யான்ஷ் செட்ஜ், ஸ்வப்னில் சிங், அர்பிரித் குலேரியா ஆகியோரும். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து யஷ் தயால், கே.எஸ்.பரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், தசுன் ஷானகா ஆகியோரையும். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அர்ஷத் கான், ரமன்தீப் சிங், ஹிரித்திக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டுயன் ஜேன்சன், ஜை ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

IPL Players
IPL Players

இந்த நிலையில் ஆர்சிபி அணி தரப்பில் 11 வீரர்களை விடுவித்ததன் மூலமாக 40.75 ரூபாய் கோடி பர்ஸில் இருக்கும். அதேபோல் மும்பை அணியும் 11 வீரர்களை விடுவித்துள்ளதால், அந்த அணியின் பர்ஸில் 15.25 ரூபாய் கோடி இருக்கும். குஜராத் அணி 8 வீரர்களை விடுவித்துள்ள நிலையில், அந்த அணியின் பர்ஸில் 13.85 ரூபாய் கோடி கையிருப்பு வைத்துள்ளது. லக்னோ அணியும் 8 வீரர்களை விடுவித்துள்ள நிலையில் 13.9 ரூபாய் கோடி பர்ஸில் இருக்கும். ஐதராபாத் அணியை பொறுத்தவரை 6 வீரர்களை விடுவித்துள்ளதால், அந்த அணியிடம் 34 ரூபாய் கோடி கையில் உள்ளது.

அதேபோல் கேகேஆர் அணி 12 வீரர்களை விடுவித்துள்ள நிலையில், அந்த அணியிடம் 32.7 ரூபாய் கோடி கையில் உள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை 8 வீரர்களை விடுவித்துள்ளதன் மூலமாக 31.4 ரூபாய் கோடி கையில் வைத்துள்ளது. டெல்லி அணி மொத்தமாக 11 வீரர்களை விடுவித்து மொத்தமாக 28.95 ரூபாய் கோடி கையில் வைத்துள்ளது. ராஜஸ்தான் அணி 9 வீரர்களை விடுவித்து 14.5 ரூபாய் கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கவுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி இம்முறை 29.1 ரூபாய் கோடியுடன் மினி ஏலத்தில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com