குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாவது ஏன் தெரியுமா?

குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாவது ஏன் தெரியுமா?

மது உடலில் உள்ள எலும்புகள் உடலின் வடிவத்தை பராமரிக்கவும், உள் உறுப்புகளை பாதுகாக்கவும் உதவுகிறது. குளிர்காலத்தில் மூட்டு மற்றும் தசை வலி வயதானவர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டர் முன்பு நீண்டநேரம் அமர்ந்தவாறு பணி செய்யும் இளம் வயதினரையும் பாதிக்கிறது. அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாவதன் காரணங்கள் என்ன?

1. குளிர்காலத்தில், காற்றில் நிலவும் ஈரப்பதம், வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுத்தும்போது உடலின் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. குறைந்த வெப்பநிலை மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைநார்கள், தசைகள் மற்றும் குருத்தெலும்புகளில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

2. குளிர்காலத்தில் இரத்த நாளங்கள் சுருங்குவதால் மூட்டுகளில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

3. மூட்டு வலிக்கான மற்றொரு காரணம் போதிய அளவு வைட்டமின் டி இல்லாதது. குளிர்காலத்தில், சூரியனின் வெப்பம் குறைவாக இருக்கும். மேலும், குளிருக்குப் பயந்து முதியவர்கள் சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள்.

4. குளிர்காலத்தில் எடை அதிகரிப்பது சகஜம். அதிக எடை, மூட்டுகளில் அழுத்தத்தையும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

மூட்டுவலியைக் குறைக்கும் வழிமுறைகள்:

1. குளிருக்கு இதமான ஸ்வெட்டர், தெர்மல் அணிந்து முழங்கால்கள், கால்கள், கைகள், கழுத்து மற்றும் மூட்டுவலி பாதிப்புக்குள்ளான பகுதிகளையும் எப்போதும் மறைக்கும் வண்ணம் ஆடைகள் இருக்க வேண்டும்.

2. லேசான உடற்பயிற்சி மற்றும் மூட்டு அசைவுக்கான பயிற்சிகளை செய்வதால் மூட்டுக்கள் விறைப்புத் தன்மை அடையாமல் இருக்கும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடப்பது என்று உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

3. நிறைய சூடான தண்ணீர் குடிக்கவும். உடலில் ஏற்படும் லேசான நீரிழப்பு கூட மூட்டுகளின் வலிக்குக் காரணமாக அமையும்.

4. குளிக்கும்போது கைகால் மூட்டுகளில் சூடான தண்ணீரை ஊற்றிக் குளிப்பது வலியை குறைக்கிறது. வெதுவெதுப்பான நீரில் கை மற்றும் கால்களை ஊறவைப்பது மூட்டு வீக்கத்தையும் வலியையும் தணிக்கும்.

இதையும் படியுங்கள்:
படுக்கையில் இருந்து எழும்போது தலை சுற்றுகிறதா? இதுதான் காரணம்!
குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாவது ஏன் தெரியுமா?

5. மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் பராஃபின் மெழுகு (Paraffin bath) அல்லது ஹீட்டிங் பேட் (heating pad) ஆகியவற்றை வலி இருக்கும் பகுதியில் வைக்கலாம்.

6. பசி எடுக்கவில்லை என உணவுகளை தவிர்ப்பது உடம்பில் வலியை ஏற்படுத்தும். ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவு மூட்டு வீக்கத்தைக் குறைப்பதில் நன்மை பயக்கும். எனவே, ஆளி விதை, அக்ரூட் பருப்புகள், வெண்ணெய் மற்றும் மீன் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். வைட்டமின் டி நிறைந்த காளான் மற்றும் பால் பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.

7. மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் குளிர்கால எடை அதிகரிப்பைத் தவிர்க்கவும். கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், அதிக நேரம் தூங்குவதை தவிர்ப்பதும் நல்லது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மூட்டு வலியைக் குறைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com