சீரான மாத வருமானம் இல்லையா? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!

Financial Burden
Monthly Income
Published on

புதியதாக சொந்தத் தொழிலைத் தொடங்கியவர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்கள் போன்ற நிலையான வருமானம் இல்லாத நபர்கள் நிதித் தேவையை சமாளிக்கத் திணறுவார்கள். நிதித் தேவையில் இவர்கள் ஏற்ற இறக்கம் நிறைந்த சூழலைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என இப்போது பார்ப்போம். 

நமது வருமானத்திற்கு ஏற்பவே நிதி திட்டமிடலும் இருக்க வேண்டும். பொதுவாக மாத வருமானத்தை செலவு மற்றும் முதலீடு இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வதும், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதும் தான் நிதி திட்டமிடல். ஆனால், சீரான மாத வருமானம் இல்லாத நபர்களுக்கு நிதி திட்டமிடல் என்பது சிக்கலாக இருக்கும். ஏனெனில் மாதந்தோறும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற நிச்சயமற்ற சூழலில் அவர்கள் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

மாதந்தோறும் ஒரே மாதிரியான வருமானம் இல்லாததால், ஒவ்வொரு மாதமும் மாதாந்திர செலவுகள் சராசரியாக கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் மண் நெருக்கடி ஏற்பட்டு, மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. இவர்கள் பண நெருக்கடியை சமாளிக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

சீரான வருமானம்:

மாதந்தோறும் வருமானம் ஏறக்குறைய இருந்தாலும், அதில் கிடைக்கும் நிலையான வருமானம் எதுவென அறிந்து, குறைந்தபட்சமாக ஒரு குறிப்பிட்ட அளவு சீரான வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வருமானம் எதில் கிடைக்கிறதோ, அது சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் கவனம் செலுத்தினால் கூடுதல் வருமானம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

உபரி தொகை:

திடீரென ஒரு மாதத்தில் நினைத்ததை விட அதிகமாக கிடைக்கும் போது, செலவுகள் போக மீதமிருக்கும் உபரி தொகையை சேமித்து வைக்க வேண்டும். இந்தத் தொகை நிதி நெருக்கடி ஏற்படும் போதும், குறைந்த வருமானம் கிடைக்கும் போதும் உதவிகரமாக இருக்கும்.

மாற்று வழி:

சேமித்து வைக்கும் உபரி தொகையில் ஒரு பகுதியை வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களில் கூட முதலீடு செய்யலாம். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வைப்பு நிதித் திட்டங்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வைப்பு நிதி முதலீட்டில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவது சரியா?
Financial Burden

மாற்று வருமானம்:

தற்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளுடன், மாற்று வருமானம் தரக்கூடிய வேலைகள் ஏதேனும் பகுதி நேரமாக கிடைக்குமா என்பதையும் தேட வேண்டும். அப்படி பகுதி நேர வேலைகள் கிடைக்கும் பட்சத்தில், உங்கள் நிதி நெருக்கடியை ஓரளவு சமாளித்து விட முடியும்.

வீண் செலவுகளைக் குறைத்தல்:

நிலையான வருமானம் இல்லாத நிலையில், வீண் செலவுகளைக் குறைப்பது மிகவும் முக்கியமானது. எங்கேனும் வெளியில் செல்ல வேண்டி இருந்தால் கூட பெட்ரோல் போட்டு இருசக்கர வாகனத்தில் செல்லாமல், அரசுப் பேருந்துகள் மற்றும் இரயில்களைப் பயன்படுத்தலாம். இதுமட்டுமின்றி எதில் எல்லாம் வீண் செலவுகளைக் குறைக்க முடியும் என ஆராய்ந்து, அதன்படி செயல்பட வேண்டும்.

மாதந்தோறும் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பது நல்லது. அப்போது தான் அதற்கேற்ப அவர்களும் நிதி நெருக்கடியைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com