உலகப் பொருளாதார மன்றத்தில் இந்தியாவுக்குப் பெருமை: உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனை!

இந்தியாவின் எத்தனால் கலப்பு திட்டம் மற்றும் உயிரிப் பொருளாதார சாதனைக்கு உலகப் பொருளாதார மன்றம் பாராட்டு.
E29 Petrol
E20 Petrol Economic Transnational Institute & TOI
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

உலகப் பொருளாதார மன்றம் (WEF) இன்று தனது அறிவிப்பில் , உலகெங்கிலும் உள்ள அரசுகள் உயிரை பொருளாதார வளர்ச்சிக்காக தங்களது கொள்கைகளை மாற்றி விரிவுபடுத்தி வருகின்றன. இதில் தேவையும் உற்பத்தியும் எவ்வாறு ஒன்றாக இணைந்து வளர முடியும்? என்பதற்கு உதாரணமாக இந்தியா உள்ளது, என்று பாராட்டி உள்ளது. உலக பொருளாதாரம் மன்றமும் கேப்ஜெமினி இன்வென்ட் நிறுவனமும் இணைந்து உயிரிப் பொருளாதாரக் கொள்கைக் குறியீட்டு அறிகையை தயாரித்துள்ளது.

இந்த அறிக்கையில் இந்தியாவின் கொள்ளை , நாட்டின் சாதகமான சூழல்கள் , சாதகமான சூழல்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் நிறுவனத் திறன் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அரசாங்கம் உற்பத்திக்கான ஆதரவை , தேவையை உருவாக்கும் செயல்பாடுகளுடன் எவ்வாறு இணைக்கலாம்? என்பதற்கு முழு உதாரணமாக எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தினை சுட்டிக்காட்டி உள்ளனர். பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரித்தொழில்நுட்பக் கொள்கை போன்ற இலக்குடன் இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள கொள்கை கருவிகளில் 48% தனிப்பட்ட துறைகளுக்கு மட்டும் ஆதரவளிக்காமல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வரிச் சலுகைகள் மற்றும் நிறுவனத் திறன் போன்ற பொதுவான செயல்பாடுகளை ஆதரிக்கின்றன. நிதி உதவி , உட்கட்டமைப்பு வசதிகள் , திறன் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கைகள் ஆகிய கொள்கை கருவிகளின் பங்களிப்பில் 76% பெற்று சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து 69% பெற்று இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா 67% பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

ஒட்டுமொத்தமாக உயிரி பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவான சூழ்நிலையை இந்தியா உருவாக்குகிறது. உற்பத்தி மற்றும் தேவையை உருவாக்கும் நடவடிக்கையை இந்தியா திறம்பட செயல்படுத்தி உள்ளது. எத்தானாலை பிரித்தெடுக்கும் புதிய வடிப்பாலைகளை உருவாக்க மானிய சலுகைகளுடன் கூடிய நிதி உதவிகள் மத்திய அரசினால் வழங்கப்பட்டு ஆதரிக்கப்பட்டுள்ளது.

எத்தனாலுக்கான தேவையை உருவாக்க , அதற்கு இணையான உற்பத்தி திறனும் நாட்டில் பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசின் இலக்கு 2030 ஆம் ஆண்டிற்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் , அதற்கு முன்பே 20% எத்தனால் கலப்பு திட்டத்தை ஆதரிக்கும் வகையில் உற்பத்தித்திறன் விரிவு செய்யப்பட்டுள்ளது.

Ethanol petrol
Ethanol petrol

உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையில் சர்வதேச அளவில், இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரேசில் புவியியல் பகுதிகளில் 935 உயிரிப் பொருளாதாரக் கொள்கைக் கருவிகளைப் ஆய்வு செய்துள்ளது. உயிரி சார் தயாரிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களும் , வணிகச் சந்தைகளை அடைய வேண்டுமென்றால் அரசாங்கம் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியுடன் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி விடக்கூடாது என்று உலக பொருளாதார மன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் கொள்முதல் உறுதிமொழிகள் , விநியோக உத்தரவாதங்கள் , உற்பத்தியாளருக்கு வருவாய் குறையாத வகையில் வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் தொழில்துறை , மருந்து மற்றும் வேளாண் உயிரித் தொழில்நுட்பம் ஆகியவை எதிர்கொள்ளும் வணிகமயமாக்கல் தடைகளை தகர்க்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உமிழ்வுக் குறைப்பு, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் , தனியார் முதலீடு மற்றும் சந்தை ஏற்பு ஆகியவற்றில் சர்வதேச அளவில் ஒப்பிடும் வகையில் தரநிலைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யோசனைகளையும் தெரிவித்துள்ளது.

உயிரிப் பொருளாதாரத்திற்கான கொள்கை வெறும் காகித அறிக்கையுடன் முடித்து விடாமல் , அதற்கான நடைமுறை சாத்தியக் கூறுகளுடன் இந்திய பொருளாதாரம் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் எத்தனால் கலப்பு திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.