ஒரு காலத்தில் சந்தையை ஆண்ட இந்திய பிராண்டுகள்!

Indian brands
Indian brands
Published on

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கிளாசிக் பிராண்டுகளை நினைவுகூர்வோம்.

இந்தியாவின் மறக்கப்பட்ட பிராண்டுகள், அவற்றின் தரமான தயாரிப்புகளின் காரணமாக, சந்தையில் ஒரு காலத்தில் நிறுவனத்திற்கு சிறந்த வணிகத்தை வழங்கியுள்ளன.

டியோடரன்ட் பிரிவில் ஒரு உன்னதமான 'ரெக்ஸோனா', 90களில் வீட்டுப் பெயராக இருந்தது. சில புதிய பிராண்டின் காரணமாக இன்றைய இளைஞர்களின் மத்தியில் அதன் ஈர்ப்பை இழந்தது.

'பிக் ஃபன் பபிள்கம்' 80கள் மற்றும் 90களில் குழந்தைகளை அதிகமாக கவர்ந்தது. ஆனால் போட்டி அதிகரித்ததால் அதுவும் மறைந்துவிட்டது. 'மாருதி ஜிப்சி' இந்தியாவின் முதல் SUV ஆகும். இது ஒரு காலத்தில் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தின் கனவாக இருந்தது. ஆனால் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப உருவாகத் தவறியது அதன் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

காலத்தால் அழியாத 'கோல்ட் ஸ்பாட்' என்று அழைக்கப்படும் ஆரஞ்சு சுவை கொண்ட குளிர்பானம், 'கோகோ கோலா' வரும் வரை பரவலாக பிரபலமாக இருந்தது.

தரம் மற்றும் மலிவு விலைக்கு பெயர் பெற்ற 'HMT கடிகாரங்கள்' ஜப்பானிய கடிகாரங்கள் மற்றும் 'டைட்டனின்' எழுச்சி ஏற்பட்டபோது விடைபெற்றது.

'பினாக்கா' tooth paste மற்றும் தென்னிந்தியாவின் பிரபலமான 'கோபால் பல் பொடி', 'கோல்கேட்' மற்றும் பிற நிறுவனங்கள் முன்னணிக்கு வந்த பிறகு காலப்போக்கில் மறைந்து போனது. இந்திய சமையலறைகளில் ஒரு முக்கிய பெயராக இருந்த 'டால்டா' சமையல் எண்ணெய், புதிய சுகாதார போக்குகள் மற்றும் மாற்றுகளை எதிர்த்துப் போராடியது. இருப்பினும் அது இன்னும் சந்தையில் உள்ளது.

ஆட்டோமொபைல் துறையில், மாருதி சுசுகி போன்ற உள்ளூர் உற்பத்தியாளர்களின் கடுமையான போட்டி காரணமாக 'செவ்ரோலெட்' 2017 இல் இந்தியாவிலிருந்து வெளியேறியது.

உலகின் மலிவான கார் என்று ஆரம்பத்தில் அதிகம் பேசப்பட்ட 'டாடா நானோ', சில சிக்கல்கள் காரணமாக நுகர்வோரை ஈர்க்கத் தவறிவிட்டது. விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு காலத்தில் முக்கிய பங்கு வகித்த 'ஜெட் ஏர்வேஸ்', நிதி நெருக்கடி மற்றும் குறைந்த விலை விமான நிறுவனங்களின் போட்டி காரணமாக வெற்றியை அடையத் தவறிவிட்டது.

குளிர்சாதன பெட்டிகளுக்கு பெயர் பெற்ற 'கெல்வினேட்டர்' மற்றும் விளம்பர உத்திகளுக்கு பெயர் பெற்ற 'ஒனிடா' ஆகியவை எப்படியோ மறைந்து போன பிராண்டுகளில் ஒன்றாகிவிட்டன.

இந்த பிராண்டுகள் ஒவ்வொன்றும், வளர்ந்து வரும் நுகர்வோர் மற்றும் தொடர்ந்து மாறிவரும் சந்தைகளின் புது trendஐ எடுத்துக் காட்டுகிறது. இறுதியில் புதிய ட்ரெண்டின் காரணமாக இவைகளின் முன்னேற்றம் மறைந்து போனது. இந்த பிராண்டுகள் குறித்த ஏக்கம் பழைய மற்றும் இளைய தலைமுறையினரிடையே தொடர்ந்து நீடிப்பதால், சந்தை எவ்வளவு விரைவாக மாறுகிறது என்பதையும், மாற்றம் மட்டுமே நிலையானது என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.

இதையும் படியுங்கள்:
பெயர் மாற்றத்தால் சாதனை புரிந்த இந்திய பிராண்டுகள்!
Indian brands

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com