2024-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் தெரியுமா?

 India's economic growth in 2024.
India's economic growth in 2024.
Published on

உலகப் பொருளாதார நிலையை ஒப்பிடுகையில் இந்தியாவினுடைய செயல்பாடு முன்னேற்றம் மற்றும் நம்பிக்கை கூறியதாகவும் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மேலும் முன்னேற்றம் அடையும் என்றும் ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கை, உலக பொருளாதார மந்த நிலை பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வளர்ந்த நாடுகளே சிக்கலை சந்திக்கின்றன. அதே நேரம் பொருளாதாரம் நலிவடைந்த நாடுகள் பல்வேறு வகையான இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் வறுமை, விலைவாசி உயர்வு ஆகியவை பல்வேறு நாடுகளில் முக்கிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. உலகப் பொருளாதார மந்த நிலை உருவானதற்கு காலநிலை மாற்றத்தை ஏற்படுத்திய இயற்கை ஒரு காரணமாக இருக்கும் அதே நேரத்தில் போர் பதற்றம் செயற்கையான காரணமாகவும் விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
2075-ல் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும்?
 India's economic growth in 2024.

அதே நேரம் இந்தியாவுடைய பொருளாதாரம் என்பது நம்பகத்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவினுடைய பொருளாதாரம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பொருளாதாரமாக இருக்கிறது. நாட்டினுடைய உள்கட்டமைப்பு, பன்னாட்டு முதலீடு ஈர்ப்பு மற்றும் உள்நாட்டு அமைதி, மக்கள் தொகை ஆகியவை காரணமாக இந்தியா தொடர் பொருளாதர வளர்ச்சியை கண்டு வருகிறது.

இந்தியாவினுடைய தேவை மற்றும் தயாரிப்பு மற்றும் உற்பத்தி ஆகியவை வலுவான வளர்ச்சியை கண்டு வருகின்றன. இந்தியாவின் தயாரிப்பு துறை, உற்பத்தித் துறையினுடைய வளர்ச்சி குறியீடு உயர்வை கண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2024 நடப்பு நிதியாண்டில் இந்தியா 6.20 சதவீத வளர்ச்சியை அடையவும். இவ்வாறு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் 171.79 லட்சம் கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com