கடந்த ஆண்டை விட நடப்பு நிதி ஆண்டில் இந்திய அரசு மீதான நிதி பற்றாக்குறை அதிகரித்து இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.
உலகில் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதார மந்த நிலை காரணமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட தற்போது வருவாய் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவும் நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையால் பாதிப்பை சந்தித்து இருக்கிறது.
நாட்டின் ஒரு சேர வளர்ச்சி இல்லாத காரணத்தாலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிகப்படியான வருவாய், குறிப்பிட்ட சில மாநிலங்களில் வருவாய் இழப்பு போன்றவை காணப்படுவதால் நாட்டில் செலவினங்களை சமாளிக்க ஆகும் நிதி பற்றாக்குறையாக மாறி இருக்கிறது.
இவ்வாறு நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 45 சதவீதமாக இருக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்து இருக்கிறது. இதனால் அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. அதேசமயம் அத்தியாவசிய துறைகளுக்கான நிதி தடை இன்றி வழங்கப்படுவதாகவும், இதர துறைகளுக்கான நிதி பற்றாக்குறை காரணமாக காலம் தாழ்த்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நிதி பற்றாக்குறை காரணமாக நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்ட வளர்ச்சி திட்டங்கள் போதுமான அளவு நிதி வராததால் சுணக்கமான நிலையிலேயே செயல்படுத்தப் படுகின்றன.
இவ்வாறு நடப்பு நிதியாண்டில் இந்திய அரசு 17.86 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையால் பாதிப்பை சந்தித்து இருப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப் படுகிறது. அதே சமயம் தனிநபர் வருமானம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் பொருளாதார நிலை ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.