திருஷ்டி, தடைகளை விரட்டும் எலுமிச்சம் பழம்!

Lemon that repels obstacles thirusti
Lemon that repels obstacles thirusti
Published on

ந்தப் பிரபஞ்சத்தின் சக்தி பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பொதுவாக அதிகரித்துக் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் அந்த நாட்களில் பூஜை புனஸ்காரங்கள், விசேஷங்கள், பரிகாரங்கள் கூட வெகுவாக செய்யப்படுகின்றது. மேலும், எதிர்மறை விஷயங்களாக இருக்கக் கூடிய பில்லி, சூனியம், ஏவல் போன்றவை கூட அந்த நாளில் செய்வதைப் பார்த்திருப்போம். அதைவிட சக்தி வாய்ந்த நாளாக இருக்கக்கூடியது சனிக்கிழமை!

சனிக்கிழமையில் எலுமிச்சை பழத்தை வைத்து இதை செய்யும்பொழுது நம்மை பிடித்த திருஷ்டிகள், பீடைகள், தரித்திரங்கள் அனைத்தும் ஒழியும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சனிக்கிழமையில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத்தான் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

பொதுவாக, சனிக்கிழமை ஹரிநாராயணருக்கு உகந்ததாகச் சொல்லப்படுவது உண்டு. சனிக்கிழமையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்கு தரும் தீர்த்தத்தைப் பருகி வந்தால் உடலில் நோய் நொடிகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையிலும் துளசி மாலை சாத்தி பெருமாளை வழிபட்டு வருபவர்களுக்குத் தடைகள் விலகும் என்பது ஐதீகம். அதுபோல, வீட்டில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பழத்தின் மேல் கரும்புள்ளிகள் இல்லாதவாறு சுத்தமாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அது தோஷம் அற்றதாக இருக்கும். இந்த எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். இதை பூஜை அறையில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து நறுக்குங்கள். பின்னர் வெட்டிய பழத்தை வீட்டின் நான்கு மூலைகளிலும் பிழிந்து அதன் சாற்றை தெளியுங்கள்.

இதையும் படியுங்கள்:
மயிலாப்பூரின் எல்லைக்காளி, கிராம தேவதை யார் தெரியுமா?
Lemon that repels obstacles thirusti

பிறகு கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை வெளியில் தூக்கி எறிந்து விடுங்கள். வலது கையில் இருப்பதை இடது புறத்திலும், இடது கையில் இருப்பதை வலது புறத்திலும் மாறி தூக்கி எறிய வேண்டும். திருஷ்டி கழிப்பது போலவே இதைச் செய்வதாலும் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய தரித்திரங்கள், பீடைகள் ஒழிவதாக சாஸ்திர நம்பிக்கை உண்டு. பின்னர் கையை அலம்பிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் உள்ளே வந்து விடுங்கள்.

இதுபோல, ஒவ்வொரு சனிக்கிழமைகளும் நீங்கள் எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்து வெட்டி எடுத்துக் கொண்டு வந்து நான்கு மூலைகளிலும் தெளித்து வெளியில் போட்டு வர வேண்டும். இதனால் கண்ணுக்குத் தெரியாத திருஷ்டிகள், வாஸ்து தோஷங்கள், தீய சக்திகள், துர் தேவதைகள் விரட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் இதுபோல வீட்டில் செய்து பார்க்கலாம். மந்திர, மாந்த்ரீக, தாந்த்ரீகங்கள் கூட இந்த எலுமிச்சை பழத்தின் முன்பு தோற்றுவிடும். அந்த அளவிற்கு எலுமிச்சை பழம் தேவக் கனியாக இருப்பதால் மகத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் பூஜை அறையில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை பழம் வீட்டில் தீர்ந்து போகக்கூடாது. குறிப்பாக, வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் எலுமிச்சை பழம் வீட்டில் இருப்பது மிகவும் விசேஷம். இதை வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு, கடை, அலுவலகம், குழந்தைகள், குடும்பத்திற்கு என்று திருஷ்டி சுற்றி முச்சந்தியில் போட்டு வந்தால் பல தடைகளைத் தாண்டி வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com