இந்தியர்கள் வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

stock market...
stock market...Image credit - india-briefing.com

ந்தியப் பங்குச் சந்தை தாண்டி முதலீட்டினை பரவலாக்கும் எண்ணம் பல இந்தியர்களுக்கு உள்ளது. அதன் மூலம், தங்களது முதலீட்டினை இன்னும் அதிகமாக பெருக்க எண்ணுகின்றனர். அத்தகைய வெளிநாட்டுப் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

வெளிநாட்டுப் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் சில நிறைகுறைகள் உள்ளன.

நிறைகள்:

* பிடித்த நிறுவனங்களில் முதலீடு; நமக்குப் பிடித்த மைக்ரோசாஃப்ட், கூகுள், அமேசான் போன்ற உலகளாவிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு. 

* ரூபாயின் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக லாபம்: ரூபாயின் பணத்தின் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக பங்கின் விலை சரிந்தாலும்கூட, டாலர் மதிப்பு உயர்ந்தால், லாபம் வர வாய்ப்பு உண்டு.

* உலகளாவிய முதலீட்டுப் பரவலாக்கம்: முதலீட்டு பரவலாக்கத்திற்கு உதவும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, எல்லா நாடுகளிலும் ஏற்படும் என சொல்ல இயலாது.

* அதிகப் பணப் பெருக்க வாய்ப்புகள்: டெஸ்லா, அமேஸான் போன்ற சில வெளிநாட்டுப் பங்குகளில் அதிகப் பணப் பெருக்கத்திற்கான வாய்ப்பு உள்ளது.

* வெளிநாட்டு பங்குச்சந்தையின் முதிர்ச்சி: முதிர்ச்சி அடைந்த பங்கு சந்தையினை பயன்படுத்த வாய்ப்பு. எனவே, அத்தகைய பங்கு சந்தைகள் சாதாரணமாக வீழ்ச்சி அடையாது.

குறைகள்:

* வெளிநாட்டுப் பங்குகளின் அதிக விலை: ரூபாயின் மதிப்பு காரணமாக, வெளிநாட்டுப் பங்குகளின் விலையானது மிகவும் அதிகம். உதாரணமாக, ஒரு அமேஸான் பங்கின் இன்றைய விலை கிட்டத்தட்ட 180 டாலர்கள். 1 டாலரின் இந்திய மதிப்பு = 83 ரூபாய். ஒரு அமேஸான் பங்கின் இந்திய விலை கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய்.

* அதிக தரகு கட்டணம்: பங்குச் சந்தை தரகர்களின் அதிக கட்டணம். வெளிநாட்டு பங்குகளை வாங்குவதற்கு தரகு கட்டணம் மிகவும் அதிகம். 

* ரூபாயின் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக நஷ்டம்: ரூபாயின் மதிப்பின் ஏற்றத்தாழ்வு காரணமாக, பங்கின் விலை ஏறினால் கூட லாபம் இல்லாமல் போகலாம்.

stock market...
stock market...Image credit - india-briefing.com

* இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுப் பங்குகள் மீதான அதிக வரி: இந்திய அரசானது வெளிநாட்டுப் பங்குகளை, நமது நாட்டின் பங்குகளைப் போன்று கணக்கிடுவதில்லை. ஏனென்றால், வெளிநாட்டுப் பங்குகள் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவதில்லை. வெளிநாட்டுப் பங்குகளுக்கு 20% வரி விதிக்கிறது.

* வெளிநாட்டுப் பங்குகளைப் பின்தொடர்வது கடினம்: நாம் அங்கு வசிக்காத காரணத்தினால், பங்குகளைச் சார்ந்த தகவல்களை அறிவது கடினம்.

* வெளிநாட்டுப் பங்குகளில் பணத்தின் பெருக்கம் குறைவு: வளர்ந்த நாடுகளில் வெளிநாட்டு பங்குசந்தைகள் முதிர்ச்சி அடைந்த காரணத்தினால், வளரும் நாடான இந்திய பங்குசந்தைகளைப்போல, அதிக அளவில் வளராது. வருடா வருடம் 8% வளர்ச்சி அடைவதை அவர்கள் நல்ல விஷயமாக கருதுவார்கள். அதனை நாம் வங்கிகளில் எளிதாகப் பாதுகாப்பாகப் பெறமுடியும்.

வெளிநாட்டுப் பங்குகளை எவ்வாறு வாங்கலாம், விற்கலாம்?

1 உலகளாவிய தரகு நிறுவனங்கள்: உலகளாவிய தரகு நிறுவனங்களின் மூலமாக கணக்கு தொடங்கி, வெளிநாட்டுப் பங்குகளை வாங்க, விற்க முடியும். உதாரணமாக, சார்லஸ் ஸ்வாப் (Charles Schwab), டி டி அமெரிடிரேட் (TD Ameritrade). 

2. இந்தியத் தரகு நிறுவனங்கள்: உலகளாவிய தரகு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ள இந்தியத் தரகு நிறுவனங்கள் மூலமாக வாங்க, விற்க முடியும். உதாரணமாக, ஐசிஐசிஐ டேரக்ட்(ICICI Direct), கோடேக் செக்யூரிடீஸ் (Kodak Securities). 

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் சுவையூட்டும் பலாப்பழ ஐஸ்கிரீம்!
stock market...

3. இந்தியச் செயலிகள்: வெளிநாட்டுப் பங்குகளை பரிவர்த்தனை செய்ய உதவும் செயலிகள் மூலமாக, பங்குகளை வாங்கலாம், விற்கலாம். உதாரணமாக, வெஸ்டெட் பைனான்ஸ் (Vested Finance). 

4. தேசியப் பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை தளங்கள்: நமது நாட்டின் பங்குச் சந்தைகளின் வெளிநாட்டுப் பங்குகளுக்கான பிரத்யேக தளங்கள் NSE - IFSC, INDIA - INX வாயிலாக பரிவர்த்தனை செய்யமுடியும். 

5. இந்திய பரஸ்பர நிதிகள்: வெளிநாட்டுப் பங்குகளைக் கொண்ட இந்திய பரஸ்பர நிதிகளின் திட்டங்கள் வாயிலாக, வெளிநாட்டு பங்குகளில் முதலீடு செய்ய முடியும். உதாரணமாக, மோதிலால் ஓஸ்வால் எஸ் அன் பி 500 (Motilal Oswal S & P 500), கோடேக் யூ எஸ் ஈக்விட்டி பண்ட் (Kodak US Equity Fund).

வெளிநாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, வெளிநாட்டுப் பங்குகளைக்கொண்ட இந்திய பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எளிமையானது. அவற்றில் மிகவும் குறைவாக 1000 ரூபாய்க்குகூட அலகுகளை வாங்க முடியும். மேலும், வரி செலுத்துதல், பணப் பரிமாற்றக் கட்டணங்கள், தரகுக் கட்டணங்கள் போன்ற கடினமான அம்சங்கள் அவற்றில் கிடையாது.

இல்லை, எனக்கு நேரடியாக வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டுமென்று நினைத்தால், குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் தாண்டி முதலீடு செய்வது நலம். அப்போதுதான், ஓரளவிற்கு கட்டணங்களைக் குறைக்க முடியும். அப்போதும், வெளிநாட்டு முதலீடுகள் சார்ந்த பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை உங்களுக்கு கைவல்யமாக இருப்பின், அவற்றில் இறங்கலாம்.

வெளிநாட்டு முதலீடு வேண்டாமெனில், இந்திய பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிப்டி 50, நிப்டி நெக்ஸ்ட் 50 போன்ற முதலீடுகளுடன் நாம் நமது பங்குச்சந்தை முதலீடுகளை நிறுத்திக்கொள்ளலாம்.

வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்ய நினைத்தால், வெளிநாட்டுப் பங்குகளைக்கொண்ட இந்திய பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து, முதலீடுகளைப் பரவலாக்கிக்கொள்ளலாம். இதுதான் பெஸ்ட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com