அதிக லாபம் தரும் 2026-ன் புதிய முதலீட்டு ரகசியங்கள்!

investment options 2026
investment options 2026Img credit: AI Image
Published on

பொதுவாக நாம் சேமிப்பு என்று நினைத்தாலே மியூச்சுவல் ஃபண்ட் SIP முறையைத்தான் யோசிப்போம். ஆனால், 2026 ஆம் ஆண்டில் தொழில்நுட்பமும் அரசாங்கத்தின் புதிய திட்டங்களும் முதலீடு செய்யும் முறையையே மாற்றிவிட்டன. ஆம், அதிக லாபம் தரக்கூடிய பல நவீன முதலீட்டு வாய்ப்புகள் தற்போது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

1. செமிகண்டக்டர் புரட்சி:

2026-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் செமிகண்டக்டர் மிஷன் 2.0-க்காக சுமார் ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இனி போன் முதல் எலக்ட்ரிக் கார் வரை எல்லாவற்றிற்கும் தேவையான சிப்கள் இந்தியாவிலேயே தயார் செய்யபட உள்ளன. இந்த நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது இதற்கென இருக்கும் சிறப்பு மியூச்சுவல் ஃபண்டுகளிலோ முதலீடு செய்வது அதிக லாபம் தரக்கூடும்.

2. ஃபிராக்ஷனல் ரியல் எஸ்டேட்:

முன்பெல்லாம் சொத்து வாங்க லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது, ஒரு பெரிய கட்டிடத்தின் சிறு பகுதியை (ரூ.10,000 அல்லது ரூ.20,000 முதலீட்டில்) பலருடன் சேர்ந்து உங்களால் வாங்க முடியும். ஆம், 2026-ல் SEBI-யால் அங்கீகரிக்கப்பட்ட SM REITs மூலம் நீங்கள் ஒரு பெரிய வணிக வளாகத்தையோ அல்லது ஐடி பார்க்கையோ உரிமையாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் மாதந்தோறும் வாடகை வருமானமும் கிடைக்கும். அந்த இடத்தின் மதிப்பு உயரும்போது உங்களுக்கு லாபமும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
தங்கம் இனி சுரங்கத்தில் மட்டுமல்ல... உங்கள் ஸ்மார்ட்ஃபோனிலும் இருக்கிறது!
investment options 2026

3. பசுமை ஆற்றல் துறை:

டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜன் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் அதிக சலுகைகளை வழங்குகிறது. 2026-ன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களால், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் அதிகப்படியான வருமானம் கிடைக்கத் வாய்ப்புள்ளது.

4. InvITs (Infrastructure Investment Trusts):

முன்பெல்லாம் சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்பு போன்ற பெரிய அரசாங்கத் திட்டங்களில் பெரும் பணக்காரர்களும், பெரிய நிறுவனங்களும் மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. ஆனால், இப்போது InvITs (Infrastructure Investment Trusts) முறை மூலம் சாதாரண மக்களும் இதில் முதலீடு செய்யலாம். இது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போன்றது; இதில் சேகரிக்கப்படும் பணம் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

இதன் சிறப்பம்சமே இதிலிருந்து கிடைக்கும் 9% முதல் 12% வரையிலான நிலையான வருமானம் தான். இந்தத் திட்டங்கள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் அல்லது மின்சாரக் கட்டணத்தின் ஒரு பகுதி, முதலீட்டாளர்களுக்கு லாபமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கடன் தள்ளுபடி (Loan write off) என்றால் என்ன? கடன் ரத்து (Loan waiver) என்றால் என்ன?
investment options 2026

எப்படி திட்டமிட வேண்டும்?

முதலீடு என்பது வெறும் பணத்தைச் சேமிப்பதையும் தாண்டி, சரியான நேரத்தில் சரியான துறையில் முதலீடு செய்வதாகும்.

  • உங்கள் முதலீட்டில் 50% SIP-லும், மீதமுள்ள 50% மேலே சொன்ன புதிய வாய்ப்புகளிலும் பிரித்து முதலீடு செய்யலாம்.

  • வரியைச் சேமிக்க புதிய வகை சோவரின் கோல்ட் பாண்டுகளை (SGB) பயன்படுத்தலாம்.

  • PLI (Production Linked Incentive) திட்டத்தின் கீழ் சலுகை பெறும் நிறுவனங்களின் பங்குகள் 2026-ல் அதிக லாபம் தருகின்றன.

முக்கிய குறிப்பு: எந்தவொரு முதலீட்டையும் தொடங்கும் முன், அது தொடர்பான ரிஸ்க் மற்றும் லாபத்தைப் பற்றி நிதி ஆலோசகரிடம் கலந்து ஆலோசிப்பது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com