தங்கம் இனி சுரங்கத்தில் மட்டுமல்ல... உங்கள் ஸ்மார்ட்ஃபோனிலும் இருக்கிறது!

Key Features of Green Gold
Key Features of Green Gold
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் என்பது சுரங்கங்களில் இருந்து புதிதாக வெட்டி எடுக்காமல் பழைய நகைகள், மின்னணு கழிவுகள் மற்றும் தொழில்துறை கழிவு களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, மீண்டும் உருக்கி சுத்திகரிக்கப்படும் தூய தங்கமாகும். இதனுடைய தேவை உலக அளவில் 15% அதிகரித்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. தரத்திலும் புதிய தங்கத்திற்கு இணையானது.

பசுமை தங்கத்தின் முக்கிய அம்சங்கள்:

90% பழைய நகைகள் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளான ஸ்மார்ட் ஃபோன்கள், கணினிகள் மற்றும் பழைய கார்களின் பாகங்களில் இருந்து மூலங்கள் பெறப்படுகின்றன. இதனால் சுரங்கத் தொழிலால் ஏற்படும் நிலப்பரப்பு சீரழிவு, நச்சு ரசாயனங்கள் பயன்பாடு மற்றும் சுரங்கங்களுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்பாடுகள் இதில் இருப்பதில்லை. சுற்றுச்சூழலுக்கு நட்பான இது 'பசுமை தங்கம்' (Green Gold) என்றும் அழைக்கப் படுகிறது.

மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் வேதியியல் ரீதியாக புதிதாக சுரங்கத்தில் எடுக்கப்பட்ட தங்கத்திற்கு இணையான தூய்மையைக் கொண்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்டாலும் தங்கத்தினுடைய தரமோ, நிறமோ மாறுவதில்லை. தற்போது சந்தைக்கு வரும் தங்க நகைகளில் 30% பழைய நகைகளை உருக்கி அதன் மூலம் எடுக்கப்பட்ட தங்கத்தையே பயன்படுத்துகிறார்கள்.

தங்கச் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் தங்கத்திற்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்திற்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசமும் இருப்பதில்லை. தரமும் குறைவதில்லை.

இதையும் படியுங்கள்:
கல்விச் செலவு எகிறுகிறதா? இன்றே தொடங்குங்கள் சில்ட்ரன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!
Key Features of Green Gold

உலகளாவிய நிலையில் 2020ல் உலகத் தங்க விநியோகத்தில் 28% மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் இருந்தது. 2021 இல் மட்டும் இந்தியா 75 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்து உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது. 2023ல் இந்தியாவின் தங்கத் தேவையில் சுமார் 15.6% (117.1 டன்) மறுசுழற்சி மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.

இது பொருளாதார ரீதியாக லாபகரமானது. பூமியிலிருந்து வெட்டி எடுப்பதைவிட மின்னணு கழிவுகளை சுத்திகரித்து அதன் மூலம் பெறப்படும் தங்கங்கள் பொருளாதார ரீதியாக லாபகரமானது. காரணம் சுரங்கம் தோண்டுவதற்கு தேவையான பெரிய பெரிய ராட்சத இயந்திரங்கள், வெடிபொருட்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதற்கு தேவையில்லை என்பதால் உற்பத்தி செலவுகளும் கம்மி. தரத்திலும் தூய்மையிலும் எந்த சமரசமும் இருப்பதில்லை.

சுரங்க வேலைகளை குறைப்பதன் மூலம் மனித உரிமைகள் மீறல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்த்து, நீடித்த நிலைத்தன்மைக்கு (sustainability) மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் சிறந்த மாற்றாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com