ஐபோன் 18 புரோ விற்பனை தொடக்கம்: இந்தியாவில் இவ்வளவு அதிக விலையா? பின்னணி காரணம் இதோ!

புதிய அம்சங்களுடன் களமிறங்கும் ஐபோன் 18 புரோ மாடல்களின் விலை உயர்விற்கான உண்மை பின்னணி.
ஐபோன் 18 - Apple Features
ஐபோன் 18 - Apple Features
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்கள் செப்டம்பர் 9, 2026 அன்று அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில் இந்த ஃபோன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12 அன்று தொடங்கியது. மேலும் நேரடி விற்பனை செப்டம்பர் 18, 2026 முதல் தொடங்குகிறது. வழக்கமான பட்ஜெட் மாடலான iPhone 18 மற்றும் புதிய 18e ஆகியவை 2027ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 18 புரோ (iPhone 18 Pro)மற்றும் ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) போன்கள் இந்தியாவில் செப்டம்பர் 18, 2026 அன்று விற்பனைக்கு வர உள்ளது. இதற்கான முன்பதிவு செப்டம்பர் 12, 2026 மாலை 5:30 மணி முதல் தொடங்கியது. செப்டம்பர் 18, 2026 முதல் கடைகளில் கிடைக்கும் மற்றும் விநியோகம் தொடங்கும்.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை:

இந்தியாவில் இந்த பிரீமியம் மாடல்களின் ஆரம்ப விலைகள்:

iPhone 18 Pro - ₹ 1,64,900 முதல் தொடங்குகிறது.

iPhone 18 Pro Max - ₹ 1,79,900 முதல் தொடங்குகிறது.

iPhone Duo (ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய போன்): ₹2,99,900.

சேமிப்பக அளவுகள் (Storage): 256GB, 512GB, 1TB மற்றும் 2TB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்:

கேமரா: 18MP சென்டர் ஸ்டேஜ் (Center Stage) முன்பக்க கேமரா.

செயற்கை நுண்ணறிவு: ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) மற்றும் மேம்பட்ட சிரி AI (Siri AI) வசதிகள்.

இணைப்பு (Connectivity): Wi-Fi 7 மற்றும் Bluetooth 6 ஆதரவு.

ஐபோன் 18 - Apple Features
iPhone 18 Pro Max - ஐபோன் 18

முக்கிய சிறப்பம்சங்கள்:

வடிவமைப்பு மற்றும் நிறங்கள்:

இந்த போன்கள் கிளேசியர் (Glacier), சில்வர் (Silver), பிளாக் (Black) மற்றும் முற்றிலும் புதிய பர்கண்டி (Burgundy) ஆகிய நான்கு கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
நாளை மதியம் 12 மணிக்கு ரெடியா இருங்க… பிரம்மாண்ட ஆஃபர் மழை காத்திருக்கு!
ஐபோன் 18 - Apple Features

Variable Aperture தொழில்நுட்பம்:

குறைந்த வெளிச்சத்திலும் மிகத் துல்லியமான புகைப் படங்களை எடுக்கவும், சிறந்த டெப்த் ஆஃப் ஃபீல்டு (Depth of Field) பெறவும் கேமராவில் இந்த வசதி சேர்க்கப் பட்டுள்ளது.

வேகமான சார்ஜிங் & கூலிங்:

இவற்றுடன் 60W வரை வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் வெப்பத்தைக் குறைக்க அடுத்த தலைமுறைக்கான வேப்பர் சேம்பர் (Vapor Chamber) தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த மாடல் மொபைல் போன்களின் விலை உலக அளவில் இந்தியாவில் தான் மிக அதிகமாக உள்ளது. இதே மாடல் போன்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியாவை விட விலைக் குறைவாக உள்ளது. அதேபோல் முந்தைய iphone மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆப்பிளின் புதிய புரட்சி: முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அல்ட்ரா வெளியாகிறதா?
ஐபோன் 18 - Apple Features

இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், கடந்த ஓராண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 சதவீதம் சரிந்து இருப்பதும் ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் விலை அதிகமானதற்கான காரணம் என்றும், இது தவிர உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரிகள் காரணமாக, இந்திய ஐபோன் விலைகள் அமெரிக்க விலையை விட அதிகமாக உள்ளன என்றும் கூறுகிறார்கள்.

அத்துடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள பழைய மாடல்களின் விலையையும் ஆப்பிள் நிறுவனம் உயர்த்தி உள்ளது. ஏ.ஐ. நிறுவனங்களுக்கான 'சிப்' தேவை பல மடங்கு உயர்ந்ததால் உலகளவில் சிப்களுக்கான விலை அதிகரித்துள்ளது. அதன் தாக்கம்தான் பழைய ஐபோன் மாடல்களிலும் விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com