பிக்சட் டெபாசிட்டிற்கு ஏற்றது வங்கியா அல்லது அஞ்சல் அலுவலகமா?

Fixed Deposit
Fixed Deposit
Published on

மாதச் சம்பளக்காரர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியையும், தொழில் செய்பவர்கள் லாபத்தில் ஒரு பகுதியையும் சேமிப்பிற்காக முதலீடு செய்வார்கள். வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் என இரண்டு துறைகளிலும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவை இரண்டில் எது சிறந்தது என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறது இந்தப் பதிவு.

ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் எந்தத் திட்டத்தில் வட்டி அதிகம், பலன்கள் அதிகம், வரிவிலக்கு மற்றும் எதில் முதலீடு செய்தால் விரைவாக இரு மடங்காகும் போன்றவற்றை கவனிக்க வேண்டியது அவசியமாகும். தனியார் வங்கிகளின் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில், ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு வட்டி விகிதத்துடன் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேநேரம் வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் அலுவலகங்களும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அமல்படுத்தி வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்கின்றன.

வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட்:

7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை வங்கிகள் வழங்குகின்றன. மேலும், ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளையும் அளிக்கின்றன. பல்வேறு வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 9%-க்கும் அதிகமாக வட்டி வழங்குகின்றன. வங்கிகளில் வழங்கப்படும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வங்கித் திட்டங்கள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை பொறுத்து அமைவதால், ஃபிக்சட் டெபாசிட் திட்டம் முடியும் வரை வாடிக்கையாளர்கள் பதட்டத்துடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது. வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்படுகிறது. அதாவது ரூ.5 லட்சத்திற்குள் முதன்மைத் தொகை மற்றும் வட்டி ஆகிய இரண்டும் அடங்கினால் தான் வங்கிகளில் உத்தரவாதம் உண்டு.

இதையும் படியுங்கள்:
Saving Tips: இந்தியர்களுக்கான சேமிப்பு யுக்திகள்! 
Fixed Deposit

அஞ்சல் அலுவலகத்தில் ஃபிக்சட் டெபாசிட்:

உத்தரவாதமான வருமானத்திற்கு என்றுமே அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் தான் சிறந்தவையாகும். அஞ்சல் அலுவலகத்தில் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு ஆண்டுக்கு 6.9%, இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு 7%, ஐந்து ஆண்டுகளுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.100-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

மத்திய அரசுடன் இணக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலகங்கள் ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை அளிக்கின்றன. மூத்த குடிமக்களைக் கவர இவர்களுக்கு அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது.

ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களைப் பொறுத்தவரை வங்கிகளைக் காட்டிலும் அஞ்சல் அலுவலகங்கள் தான் சிறந்தவையாக பார்க்கப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் உங்கள் பணத்திற்கான பாதுகாப்பு தான். ரூ.5லட்சத்திற்கும் குறைவான டெபாசிட்களுக்கு வேண்டுமானால் நீங்கள் வங்கிகளை நாடலாம்.

இருப்பினும் உங்களின் பொருளாதாரச் சூழலை அடிப்படையாகக் கொண்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை தேர்வு செய்வது சிறப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com