7.5% உறுதியான வருமானம், குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு: அனைவருக்குமான கிசான் விகாஸ் பத்ரா திட்டம்!

அஞ்சல் துறை வழங்கும் அரசு உத்தரவாத சிறுசேமிப்பு திட்டம்; 115 மாதங்களில் முதலீடு இரட்டிப்பு, குறைந்தபட்சம் ரூ.1000 முதலீட்டில் 7.5% கூட்டு வட்டி வருமானம்.
kisan-vikas-patra
kisan-vikas-patra
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் பாதுகாப்பான சிறிய சேமிப்பு திட்டமாகும். 1988 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை கிசான் விகாஸ் பத்ரா என்ற சிறுசேமிப்பு சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் இது விவசாயிகள் நீண்ட காலத்திற்கு சேமிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதனால்தான் இந்தப் பெயர் வந்தது. ஆனால் இப்போது இது அனைவருக்கும் கிடைக்கிறது. 

முக்கிய அம்சங்கள்: 

முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை 115 மாதங்களில் (9 ஆண்டுகள் 7 மாதங்கள்) முதலீட்டுத் தொகையை 7.5% வட்டி விகிதத்தில் இரட்டிப்பாக்குகிறது. இது ஆண்டுதோறும் கூட்டு வட்டியுடன் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதன் மூலம் நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு குறைந்த இடர் கொண்ட முதலீடாகும். 

குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை. தனிநபர்கள், கூட்டுக் கணக்குகள் மற்றும் மைனர்கள் (10 வயதுக்கு மேற்பட்ட) இதன் அஞ்சல் அலுவலக வழிகாட்டி மூலம் முதலீடு செய்யலாம். சந்தை அபாயங்களுக்கு ஆளாகாமல் பாதுகாப்பான வருமானத்தை தரக்கூடிய முதலீடாகும்.

கேவிபியில் செய்யப்படும் முதலீட்டிற்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடையாது. மேலும் அதன் வட்டி வருமானம் முழுமையாக வரிக்கு உட்பட்டது.

வரவு வைக்கப்பட்ட வட்டியின் மீது ஒவ்வொரு ஆண்டும் 10% டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்யப்படுகிறது.

50,000க்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு பான் அட்டைச் சான்றை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்ய வேண்டுமென்றால் வருமானச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

KVPன் நன்மைகள்: 

உத்திரவாதமான வருமானம்: 

சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல் உறுதி அளிக்கப்பட்ட தொகை கிடைக்கும். அரசாங்க ஆதரவுத் திட்டம் என்பதால் முதலீடு மிகவும் பாதுகாப்பானது. 

மூலதன பாதுகாப்பு: 

இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு முறையாகும். மேலும் சந்தை அபாயங்களுக்கு உட்படாது. முதலீட்டுக் காலம் முடிவடையும் பொழுது முதலீட்டையும் லாபத்தையும் பெறமுடியும்.

எளிதான பரிமாற்றம்: 

ஒரு நபர் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிக்கொள்ளலாம். 

எளிதான பணப்புழக்கம்: 

கணக்கு 115 மாதங்களுக்குப் பிறகு முதிர்வடைந்தாலும், 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

KVP சான்றிதழை ஈடாகக் கடனாகப் பெறுதல்: 

பாதுகாக்கப்பட்ட கடன்களை பெறுவதற்கு கேவிபி சான்றிதழை பிணையமாக அல்லது பாதுகாப்பாக பயன்படுத்தலாம். அத்தகைய கடன்களுக்கான வட்டி விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்லும் மக்கள்..! அதிர்ச்சி தரும் UNDP அறிக்கை..!!
kisan-vikas-patra

தேவையான ஆவணங்கள்: 

அடையாளச் சான்றுகள் - ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை.

முகவரி சான்று

பிறப்புச் சான்றிதழ் மற்றும் கேவிபிக்கான முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்.

அருகிலுள்ள தபால் நிலையங்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் நாமினேஷன் மற்றும் பரிமாற்ற வசதியுடன் கிடைக்கும்.

கிசான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்ய தகுதியானவர்கள்: 

விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 

குறைந்தபட்ச வயது18. பெற்றோர்/ பாதுகாவலர் மூலம் மைனர்களும் முதலீடு செய்யலாம். 

வயது வந்தவர் ஒருவர் மைனர்கள் அல்லது மனநலம் குன்றிய நபர் சார்பாக விண்ணப்பிக்கலாம். 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்களின் (HUFs) உறுப்பினர்கள் இதில் முதலீடு செய்ய முடியாதவர்கள்.

logo
Kalki Online
kalkionline.com