உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த 80:20 விதியை தெரிஞ்சிக்கோங்க!

80:20 Rule
Savings
Published on

வருங்காலத் தேவைக்கு இன்றைய முதலீடு மிகவும் முக்கியமானது. முதலீட்டை மேற்கொள்ளும் நபர்கள் 3 பக்கெட் விதி மற்றும் 50:30:20 விதி போன்ற சில விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இந்த விதிகளைப் பின்பற்றி சேமிப்பதன் மூலமாகத் தான், நமது வருமானத்தில் எவ்வளவு பணத்தை செலவு செய்கிறோம், எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறோம் என்பதை அறிய முடிகிறது. மேலும் இந்த விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வீண் செலவுகளையும் நம்மால் குறைக்க முடியும். இவ்வரிசையில் 80:20 விதியைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

80:20 விதி:

சமூகவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் 80:20 விதி பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் 80 என்பது உங்களின் முயற்சிகளைக் குறிக்கின்றன. 20 என்பது, உங்கள் முயற்சியின் மூலம் கிடைக்கும் பலன்களைக் குறிக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு தனிப்பட்ட நபரின் 80% பொருளாதார வளர்ச்சி, அவர்கள் முதலீடு செய்த 20% தொகையிலிருந்து கிடைக்கும். இதுவே ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், அந்நிறுவனத்தின் 80% விற்பனையானது 20% வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும். ஆகையால் உங்கள் வாழ்வில் 20% நிதி பழக்கவழக்கம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

உங்களின் பணம் எப்படி செலவாகிறது, எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள, உங்களின் தினசரி செலவுகளை கண்காணிக்க வேண்டும். இதில் மிகவும் முக்கியமான 20% நிதி எதில் அடங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கடன் தொகையை செலுத்துதல்:

கிரெடிட் கார்டு கடன் மற்றும் வங்கிக் கடன் போன்ற அதிக வட்டி செலுத்தக்கூடிய கடன்கள், உங்களின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால், விரைந்து கடனை அடைத்து விட்டு மற்ற நிதி இலக்குகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முயற்சிக்கலாம்.

பட்ஜெட்:

வரவு செலவுகள், முதலீடு மற்றும் அவசர நிதித் தேவைக்கு மாதாந்திர பட்ஜெட்டைப் போடுவது சிறப்பானதாக இருக்கும். இதனைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் உங்கள் நிதியை திறம்பட கையாண்டு, பொருளாதாரத்தை உயர்த்த முயற்சி செய்யலாம்.

அவசர நிதி:

எதிர்பாராத நேரங்களில் மருத்துவச் செலவுகள், வாகனச் செலவுகளை சமாளிக்க மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்க முடியும். இல்லையெனில் கடன் வாங்கி, அதற்கு மாதாமாதம் வட்டி செலுத்தவே உங்களின் வருமானத்தில் பாதி கழிந்து விடும்.

இதையும் படியுங்கள்:
வைப்பு நிதி முதலீட்டில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவது சரியா?
80:20 Rule

முதலீடு:

நம்முடைய வருங்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது. இருப்பினும், வருங்காலத் தேவைக்காக இன்றே முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனம். எதிர்காலத்தில் யாரையும் நம்பிடாமல் தன்னிச்சையாக வாழ இந்த முதலீடு உதவியாக இருக்கும். சந்தையில் பலவிதமான முதலீட்டுத் தேர்வுகள் உள்ளன. அதில் உங்களின் வருமானத்திற்கு ஏற்றாற் போல் உள்ள முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்யத் தொடங்குங்கள்.

உங்கள் வருமானத்தில் 20% நிதியை நீங்கள் கண்டறிந்த பிறகு, அதனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் உங்களின் நிதி இலக்குகளை எளிதாக அடைய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com