கால்நடை வளர்ப்புக்கு கடன்: எந்த வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?

Livestock Loan
Livestock Loan
Published on

விவசாயத்தின் முக்கிய உப தொழிலாக விளங்கும் கால்நடை வளர்ப்புத் தொழிலில் பல விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் தங்கள் கால்நடைப் பண்ணையை விரிவாக்கம் செய்ய கடன் வழங்கி உதவி வருகிறது பாரத் ஸ்டேட் வங்கி (SBI). இந்த வங்கியில் கால்நடை வளர்ப்புக் கடனுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.

கால்நடைத் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும் நிலையில், விவசாயிகள் பலரும் கால்நடை வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். மேலும் கால்நடைகளின் கழிவுகள் விவசாயத்திற்கு மிகச் சிறந்த உரமாகவும் பயன்படுகிறது. இந்நிலையில், விவசாயம் கலந்த கால்நடை வளர்ப்புக்கு விவசாயிகள் பலரும் முன்வர வேண்டும். இதனால் உரச் செலவு குறைவதோடு, நட்டத்தை சந்திக்க வேண்டிய நிலையும் உருவாகாது. கால்நடை வளர்ப்பை பெரிய அளவில் விரிவாக்கம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் இதற்கான பொருள் செலவை சமாளிக்க பல விவசாயிகளால் முடியவில்லை. ஆகையால் தான் பாரத ஸ்டேட் வங்கி கால்நடை வளர்ப்புக் கடனை வழங்கி, விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கிறது.

கால்நடை வளர்ப்புக் கடன்:

பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு வகையான கடன்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. கால்நடை விவசாயிகளுக்கு உதவும் வகையில் கால்நடை வளர்ப்புக் கடனை வழங்கி வருகிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்திற்கான கிசான் கிரெடிட் கார்டு கடன், கால்நடை வணிகத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் பிரதான் மந்திரி யோகா யோஜனாவுடன் தொடர்புடைய விவசாயக் கடன் என்ற இரு வழிகளில் எஸ்பிஐ வங்கி கால்நடைக் கடனை வழங்குகிறது.

தகுதிகள்:

இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.

18 வயது முதல் 70 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

ஏற்கனவே கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் மட்டுமே தங்கள் பண்ணையை விரிவாக்கம் செய்ய விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இருக்க கூடாது.

சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்று.

முகவரிச் சான்று.

ஏற்கனவே கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் அதற்கான சான்றிதழை‌ சமர்ப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வருமானச் சான்றிதழ்.

இதையும் படியுங்கள்:
ஆடுகளுக்கு கோடை காலத் தீவனமாகும் சீமைக் கருவேலக் காய்கள்!
Livestock Loan

விண்ணப்பிக்கும் முறை:

கால்நடை வளர்ப்புக் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் பாரத் ஸ்டேட் வங்கியை அணுகவும். வங்கி மேலாளரிடம் தகவலைக் கூறினால், அவர் உங்களுக்கு உதவுவார்.

நன்மைகள்:

கால்நடை வளர்ப்புக் கடன் மூலம் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் பால் பண்ணை போன்றவற்றை பெரிய அளவில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் முடியும். கால்நடை வளர்ப்பின் பல்வேறு செலவுகளை சமாளிக்க உதவும் வகையில் ரூ.2 இலட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com