
இந்திய பன்னாட்டு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனம் (TVS) பல்வேறு வகையான இருசக்கர வாகனங்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. 1979-ம் ஆண்டு நிறுவப்பட்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company) இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். டிவிஎஸ் நிறுவனம் டி.வி. சுந்தரம் ஐயங்கார் என்பவரால் நிறுவப்பட்டது.
இந்நிலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், வரும் ஆண்டுகளில் மின்சார ஸ்கூட்டர்கள், பைக்குகள் மற்றும் சிஎன்ஜி-இயங்கும் ஸ்கூட்டர் உட்பட பல புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
அந்த வகையில் தற்போது அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள TVS CNG ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
TVS CNG ஸ்கூட்டரில் வாடிக்கையாளரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சாலையில் ஒளிரச் செய்யும் LED விளக்குகள் உள்ளது. ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள சேமிப்பு இடம் ஹெல்மெட்டுக்கு போதுமானது, மேலும் இரண்டு பேர் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கும் வகையில் உள்ளது. CNG டேங்க் பாதுகாப்பு வசதியுடன், குறுகலான பாதைகளில் பயணம் செய்யும் வகையிலும், நகர்புற சவாரிக்கு ஏற்ற வகையிலும் இந்த ஸ்கூட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ்ஸின் ஈகோத்ரஸ்ட் அமைப்புடன் கூடிய 125 சிசி நான்கு-ஸ்ட்ரோக் எஞ்சின் ஆகும். இது 9.5 பிஹெச்பி பவரையும் 10.2 என்எம் டார்க்கையும் தருகிறது. மணிக்கு 95 கிமீ வரை, செல்லும் இந்த ஸ்கூட்டர் நகரப் பயணம் மற்றும் விரைவான பயணங்களுக்கு ஏற்றது.
இது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்கும் என்பதால் எரிபொருள் பற்றாக்குறை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 77 கிமீ மைலேஜை உறுதியளிக்கிறது.
இது இரட்டை எரிபொருள் அமைப்பு என்பதால் நீங்கள் தேவைப்படும் போது எளிதில் மாற முடியும். 10.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் சிஎன்ஜி அமைப்பு இரண்டும் நீங்கள் சவாரி செய்யும் விதத்தைப் பொறுத்து சுமார் 250-300 கிமீ வரம்பைக் கொடுக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் அழைப்பு எச்சரிக்கைகளுக்கான புளூடூத் டிஜிட்டல் கன்சோல் போன்ற அருமையான தொழில்நுட்பங்கள் உள்ளது. அத்துடன் பயணத்தின்போது உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்ய ஒரு USB போர்ட் உள்ளது. விபத்துகளைத் தவிர்க்க காம்பி-பிரேக் சிஸ்டம் (CBS) மற்றும் பக்கவாட்டு-ஸ்டாண்ட் கட்-ஆஃப் சுவிட்ச் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கிறது. இதில் உள்ள அரை-டிஜிட்டல் டிஸ்ப்ளே மைலேஜ் மற்றும் பயணத் தகவலைக் காட்டுகிறது.
இந்த ஸ்கூட்டர் ₹78,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. EMI மூலம் இந்த ஸ்கூட்டரை வாங்க ₹9,000 டவுன்பேமென்ட் மற்றும் 9.7% வட்டியில் மாதத்திற்கு ₹2,115 என மூன்று ஆண்டுகளுக்கு பணம் செலுத்தியும் வாங்கலாம். ஹோண்டா ஆக்டிவா போன்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, இது செலவுகளை பாதியாகக் குறைக்கிறது என்றே சொல்லாம். பெண்கள், மாணவர்கள், டெலிவரி ரைடர்கள் அல்லது பணத்தை சேமிக்க விரும்பும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த ஸ்கூட்டர் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது நிச்சயம்.