சேமிப்பின் மகத்துவம்: நடுத்தர குடும்பங்களின் வீட்டு செலவு மேலாண்மை யுக்திகள்!

குறைந்த வருமானத்தில் காசை கையாளும் கலை: நடுத்தர குடும்பங்களின் செலவுகளை சமாளிக்கும் சூட்சுமங்கள்!
Magnificence of Savings
Magnificence of Savings

வரும் வருமானத்தில் எப்படி வீட்டு செலவை சமாளிப்பது? குடும்ப தலைவிகளின் மிகப் பெரிய கவலை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இடங்களிலும் சேமிப்பது கஷ்டம் என்றால் நடுத்தர குடும்பம் அதாவது கணவன் வருமானத்தை நம்பி குடும்பம் நடத்தும் பெண்களின் நிலை?

Recurring Deposit, Sip என்று பேசிக் கொண்டு இருந்த நேரத்தில் ஒரு தோழியை சந்தித்த போது அவள் கூறியது மிகவும் சரியாக தோன்றியது.

அவள் கணவர் ப்ரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறார். மூத்தவன் 12வது படிக்கிறான், சின்னவள் 8வது படிக்கிறான், அவளும் வேலைக்கு போகவில்லை. கேட்டதும் சிறுக சிறுக சேமித்தது தான் இக்கட்டான சமயத்தில் உதவுகிறது என்று கூறினால்.

"என் கணவரின் சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கு போய் விடுகிறது. இந்த சம்பளத்தில் தான் வீட்டு செலவை சமாளிக்க வேண்டும்‌ என்ற கட்டாயம் வரும் போது சற்று யோசித்தால் வழியும் கிடைக்கிறது.

சம்பளம் வந்ததும் கணவன் அவளுக்கு மாத செலவுக்கு கொடுக்கும் பணத்தை 5 பகுதியாக பிரித்து பால், காய்கறி, மளிகை, மருத்துவ செலவு, இதர செலவுகள் என்று ஒரளவு இவ்வளவு பணம் என்று யூகித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ziplockகவரில் எழுதி பணத்தை போட்டு வைப்பது. அந்தந்த கவரில் இருந்து எடுத்து செலவழித்து பாக்கி பணத்தை மறுபடியும் அதே கவரில் போட்டு விடுவது. இதை கடைப்பிடிக்க ஆரம்பித்து இருக்கிறாள். மாதக் கடைசியில் அந்தந்த கவரில் இருக்கும் பணம் அந்த மாத சேமிப்பு.

காய்கறிகள் மலிவாக கிடைக்கும் சமயங்களில் மாதம் 2000 என்று கணக்கிட்டு போட்டிருந்தால் 1500 தான் செலவு ஆகி இருக்கும். டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் இல்லை என்றால் அது மிச்சம். இதர செலவுகள் என்று எடுத்து வைப்பதில் கண்டிப்பாக மிச்சம் இருக்கும். இப்படி தான் என் தோழி இன்றும் கடைபிடித்து வருகிறாளாம். அது தவிர டியூஷன் எடுப்பதால் அதில் வரும் வருமானம் கை கொடுக்கிறது என்றாள்.

இதையும் படியுங்கள்:
தங்கத்தில் முதலீடு: எந்தெந்த வழிகளில் செய்யலாம்?
Magnificence of Savings

அவள் சமையல் பிரமாதமாக செய்வாள். இந்த lock down சமயத்தில் அவள் அபார்ட்மெண்ட் இல் குடி இருக்கும் இரண்டு bachelors சமைத்து தர முடியுமா என்று கேட்கவே முதலில் யோசித்து சொல்வதாக சொல்லி இருக்கிறாள்.

பிறகு அவள் கணவரும் உன்னால் சமைத்து கொடுக்க முடியும் என்றால் தாராளமாக செய் என்று சொல்லவே வீட்டுக்கு செய்யும் சமையலை கூடுதலாக செய்து அந்த இரண்டு பேருக்கும் கொடுத்திருக்கிறாள். அதில் கிடைக்கும் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது. ஸ்கூல் பீஸ் மற்றும் இதர செலவுகள் எப்போதும் கணவர் பார்த்து கொள்கிறார். என்னுடைய சேமிப்பு கணவர் தரும் சம்பளத்தில் மிச்சம் பிடித்து சேமிப்பதும், டியூஷன் எடுப்பதால் கிடைக்கும் வருமானம் சமையல் செய்து தருவதால் கிடைக்கும் வருமானம் இப்படி ப்ளான் பண்ணுவதால் சிரமம் இல்லாமல் சமாளிக்க முடிகிறது என்றாள்.

சிறு துளி பெரு வெள்ளம் என்று சும்மாவா சொன்னார்கள். சேமிப்பு நாட்டுக்கு மட்டும் அல்ல நமக்கும் தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com