மத்திய அரசின் அசத்தலான சேமிப்பு திட்டம்..! குறைந்த நாட்களே உள்ளன... மிஸ் பண்ணிடாதீங்க..!

Mahila Samman Savings Scheme
Mahila Samman Savings Scheme
Published on

நம் அனைவருக்கும் சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என தெரியும். அவ்வாறு நாம் முதலீடு செய்யலாம் என நினைக்கும் போது நம் நினைவிற்கு முதலில் வருவது தங்கம். மேலும் சிலர் வாகனங்கள், வீடு, நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். இது போன்று பல வகைகளில் முதலீடு செய்வது வழங்கமான ஒன்று. ஆனால் நாம் வைத்திருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு தான் நம் முதலீடும் இருக்கும்.

பெண்கள் எப்பொழுதும் இந்த சேமிப்பு எனும் பழக்கத்தை தங்களுடன் வைத்துக் கொள்வார்கள். அவர்கள் வீட்டில் சமையலறையில் உள்ள சிறுசிறு டப்பாக்களில் சிறிய அளவிலான தொகையை சேமித்து வைத்து தங்களுக்கு தேவைப்படும் பொழுது அதனை எடுத்து பயன்படுத்தி வருவார்கள். 

அந்த வகையில் பெண்களின் சேமிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒரு சிறப்பான சிறு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டம் தான் இந்த “மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்”

பெண்கள் இது போன்ற சிறு சேமிப்புகளின் மூலம், தங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்து வருவதால், முதிர்வு காலத்திற்குப் பிறகு அதிக வட்டியுடன்எடுத்துக் கொள்ளலாம். 

நிதியமைச்சரால் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் வரும் 2025 மார்ச் 31 முடிவடைகிறது. எனவே இதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டு, பெண்கள் தங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் இந்த சேமிப்பு கணக்கை உடனடியாக தொடங்கலாம். 

இதையும் படியுங்கள்:
பாவ வரி (Sin Tax) என்றால் என்ன தெரியுமா? 
Mahila Samman Savings Scheme

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்:

இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கான ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இதில் எந்த வயதுடைய பெண்களாக இருந்தாலும், இரண்டு ஆண்டுகள் வரை முதலீடு செய்து வட்டியுடன் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். 

ஒருமுறை மட்டுமே முதலீடாக கொண்டுள்ள குறுகிய கால சேமிப்பு திட்டம் என்பதால் ரூ.1000 முதல் ரூ. 2 லட்சம் வரை முதலீடாக செலுத்தி இறுதியாக வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் செலுத்தும் பணத்திற்கு 7.5 சதவீதம் என்ற வட்டியுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களால் பெற முடியும். 

இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் நீங்கள் பணம் செலுத்திய பிறகு, இடையில் ஏதாவது பணத்தேவை ஏற்பட்டால், உங்கள் கணக்கில் இருந்து 40 சதவீத பணத்தை உங்களால் பெற முடியும். அதன் பிறகு மீதமுள்ள பணத்திற்கு வட்டிகள் கணக்கிடப்பட்டு, இரண்டு ஆண்டுகள் முதிர்வில் உங்கள் பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்கு பிறகு தான் இடையில் பண  பெற்றுக் கொள்ள இயலும். 

மேலும் வேறு ஏதாவது காரணங்களால் கணக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தாலும் அதற்கும் வசதி உண்டு. கணக்கு தொடங்கி 6 மாத காலங்கள் நிறைவடைந்த வேளையில், உங்களது கணக்கை நீங்கள் முடித்துக் கொள்ளலாம். அதற்கு 7.5 வட்டி இல்லாமல் 5.5 சதவீத வட்டியுடன் நீங்கள் செலுத்திய பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். 

இதையும் படியுங்கள்:
சம்பாதிக்க தொடங்கியாச்சா? அப்போ சேமிக்கணுமே! இந்த அசத்தலான ஸ்கீம் பெஸ்ட்!
Mahila Samman Savings Scheme

எவ்வாறு கணக்கை தொடங்குவது :

மத்திய அரசின் திட்டம் என்பதால், இது அனைத்து வகையான வங்கிகளிலும் கிடைக்கிறது. எனவே நீங்கள் அரசு சார்ந்த மற்றும் 4 தனியார் வங்கிகளில் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மேலும் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் தபால் நிலையங்களிலும் கணக்கை தொடங்கி பணம் செலுத்திக் கொள்ளலாம். வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாறுபாடும் இருக்காது. 

மேலும் 18 வயதிற்குட்பட்ட  பெண்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் இந்த கணக்கை தொடங்க முடியும். கணக்குத் தொடங்கி மூன்று மாத கால இடைவெளியில் மற்றொரு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். 

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்?

உதாரணமாக ஒருவர் ரூ. 2,00,000 முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளின் முடிவில், இந்த இரண்டு லட்சத்திற்கு 7.5 சதவீத வட்டியுடன் ரூ.2,32,044 கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com