
இந்திய பன்னாட்டு நிறுவனமான மஹிந்திரா (Mahindra) எஸ்யூவி (SUV), மின்சார வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் விவசாய டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை உற்பத்தி செய்கிறது. மேலும் XUV700, XUV 3XO, Thar, மற்றும் Bolero போன்ற கார்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். மஹிந்திராவின் எலக்ட்ரிக் ஆரிஜின் எஸ்யூவிகள் இந்தியாவின் மின்சார வாகன சந்தையின் மதிப்பின் அடிப்படையில் முன்னணியில் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திராவின் மீதான அபரிமிதமான நம்பிக்கையின் காரணமாக, நாடு முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருவதாக அந்நிறுவனம் கூறுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் XEV 9e பேக் இரண்டு (Pack Two) என்ற கார் சந்தைக்கு வந்துள்ளது.
மஹிந்திரா புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள XEV 9e பேக் இரண்டு (Pack Two) என்பது அதன் மின்சார எஸ்யூவி வரிசையில் உள்ள நடுத்தர-நிலை வேரியன்ட் ஆகும். ‘XEV 9e pack TWO’ மாடல் மஹிந்திராவின் டாப் எண்ட் pack three வேரியண்ட்டை போலவே ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்து விளங்குகிறது.
இது 59 kWh மற்றும் 79 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளுடன் வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் குறிப்பிட்ட பயன்பாட்டுத் தேவைகளைப் பொறுத்து 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக்குகளில் இருந்து தேர்வு செய்யலாம். 79 KWh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 656 கி.மி. ரியல் வேர்ல்டு ரேஞ்ஜை உங்களுக்கு வழங்குகிறது.
அதே நேரத்தில் 59 KWh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 542 கிமீ தூரம் செல்லும் என்று உறுதியளிக்கிறது. இந்த மாடல் 7.2 kW அல்லது 11.2 kW சார்ஜர் விருப்பங்களை உங்களுக்கு வழங்குகிறது. அதாவது இந்த பேட்டரியை வாரத்திற்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும். மேலும் பேட்டரிக்கு ஆயுள் கால வாரண்டியும் உங்களுக்கு வழங்கப்படுவதால் டென்ஷன் இல்லாமல் நீங்கள் பயணிக்கலாம்.
காஸ்ட்-டு- காஸ்ட் 3 ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, பிரீமியம் லெதரெட் இன்டீரியர்ஸ், சோனிக் ஸ்டூடியோ 16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் டோல்பி அட்மாஸ் உடன், லெவல் 2 ADAS(Advanced Driver-Assistance Systems) போன்ற பாதுகாப்பு அம்சங்கள், LED லேம்ப்ஸ், R19 அல்லாய் வீல்ஸ் ஃபிக்செட்-கிளாஸ் இன்ஃபினிட்டி ரூஃப், 5-ஸ்டார் பாரத் NCAP சேஃப்டி ரேட்டிங், சைகை கட்டுப்பாட்டுடன் பவர் டெயில்கேட் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த காரில் உள்ளது.
‘XEV 9e pack TWO’ மாடல் ரூ.24.90 லட்சத்தில் இருந்து தொடங்கும் எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. மேலும் ரூ.45.716 என்ற எளிதான EMI மூலம் வாங்கும் வசதியும் உள்ளது.