Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

Debt
Managing Debts

இன்றைய காலத்தில் கடன் வாங்குவதெல்லாம் சகஜமான ஒன்றுதான். கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், அடமானம், கந்து வட்டி, ஸ்பீடு வட்டி என வகை வகையாக கடன் வாங்குகிறார்கள். இப்படி கடன் வாங்கும் அனைவரும் சரியான விஷயங்களுக்கு சரியானபடி கடன் கடன் வாங்குகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வாழ்க்கையில் அனைத்தையும் கவனமாக திட்டமிட்டு ஒழுக்கத்துடன் செயல்பட்டால், கடனில் இருப்பவர்கள் கடனற்ற எதிர்காலத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர முடியும். இந்த பதிவில் கடன்களை திறம்பட எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பது பற்றி பார்க்கப் போகிறோம். 

உங்கள் நிதி நிலையை மதிப்பிடுங்கள்: உங்கள் கடன்களை நிர்வகிப்பதற்கான முதல்படி உங்கள் நிதி நிலைமையைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொள்வதாகும். நீங்கள் செலுத்த வேண்டிய தொகை, வட்டி விகிதங்கள் மற்றும் உங்களுடைய வரவு செலவு என அனைத்தையும் பட்டியலிடவும். இந்த மதிப்பீடு உங்கள் ஒட்டுமொத்த கடன் சுமையின் தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்தி அதை எவ்வாறு திருப்பிச் செலுத்தலாம் என்பதற்கான யோசனையைக் கொடுக்கும். 

பட்ஜெட் உருவாக்குங்கள்: கடன்களை நிர்வகிப்பதற்கு நன்கு கட்டமைக்கப்பட்ட பட்ஜெட் அமைக்க வேண்டியது அவசியம். உங்களது வரவு செலவு கணக்குகளை நன்கு ஆராய்ந்து, உங்களது கடன்களை எவ்வாறு விரைவாக செலுத்த முடியும் என கணக்கீடு செய்யுங்கள். உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஒதுக்குங்கள். பட்ஜெட்டை கடைபிடிப்பதன் மூலம் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கடனை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கலாம். 

அதிக வட்டியுடைய கடன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்: நீங்கள் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தால், அதில் எதற்கு அதிக வட்டி இருக்கிறதோ அதற்கு முன்னுரிமை கொடுங்கள். இந்த கடனால் எதிர்காலத்தில் வட்டியும் அதிகமாகும் என்பதால், அதிக வட்டியுடைய கடனை விரைவாக அடைக்க முயலவும். 

கடன்காரர்களுடன் பேசுங்கள்: உங்களது கடனை திருப்பி செலுத்துவது கடினமாக இருந்தால், உங்களுக்கு கடன் அளித்தவரை தொடர்புகொண்டு பேசுங்கள். சில சூழ்நிலைகளில் வட்டியை குறைப்பது அல்லது கடனை அடைக்க அவகாசம் கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கலாம். உங்கள் நிலைமையை நன்றாக எடுத்துரைத்து, நீங்கள் கடனை கட்டாயம் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தை விளக்கவும். 

இதையும் படியுங்கள்:
நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!
Debt

புதிய கடன்களைத் தவிர்க்கவும்: ஏற்கனவே அதிகமாக கடன் இருக்கும்போது, புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்டு பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள். உங்களது தேவையில்லாத செலவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். வரவுக்கு ஏற்ற செலவுகளை செய்யுங்கள். கொஞ்சம் ஒழுக்கத்துடன் இருந்தால் கடன் சுமை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கலாம். 

இந்த வழிகளைப் பின்பற்றினால், உங்களது கடன்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இதன் மூலமாக விரைவில் உங்களது கடனை அடைக்கவும் முடியும். கடன் இல்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை என்பதை உணர்ந்து, வாங்கிய கடனை விரைவாகத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com