மின்சார வாகனத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கிய நிதி அமைச்சகம்!

Electric Vehicles.
Electric Vehicles.
Published on

மின்சார வாகனத்தின் உற்பத்தியை ஊக்குவிக்க FAME 2 திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கியது ஒன்றிய அரசு நிதி அமைச்சகம்.

வாகனங்களால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுத்து நிறுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை சாலைகளில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க 2015 ஆம் ஆண்டு பேம் 1 என்ற மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம் நாடு முழுவதும் மின்சார வாகனங்களினுடைய எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது. மேலும் உள்நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை கூடுதல் படுத்துவதை தீவிர படுத்துவது. இதற்காக 895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, FAME 2 என்ற இரண்டாம் கட்ட முயற்சி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த திட்டத்திற்காக பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியின் மூலம் மின்சார வாகனங்கள் உடைய உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்க பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன‌. மேலும் மின்சார வாகன விற்பனைக்கும் மானிய வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 8,948 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மரத்தினால் மின்சார வாகன பேட்டரியை உருவாக்க முடியும்?
Electric Vehicles.

இந்த நிலையில் ஒன்றிய அரசு FAME 2 திட்டத்தை மேலும் சில காலம் விரிவு படுத்தும் நோக்கில் 1500 கோடி ரூபாயை கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் மின்சார வாகன விற்பனையை கூடுதல் படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியில் புதிய நிறுவனங்களுக்கு மானியம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 17.40 லட்சம் மின்சார வாகனங்களை இந்தியாவின் உள்நாட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இன்னும் ஐந்து ஆண்டுகளில் 50,000 மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது FAME 2 திட்டத்திற்கான ஆலோசனையும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com