

சேமிப்பு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது வங்கிகள் தான். ஒருவர் தான் சேமித்த பணத்தை வங்கியில் போட்டு வைப்பதற்கு காரணம் வங்கிகள் தான் பாதுகாப்பானது என்ற கருத்து. அந்த வகையில் மாணவப் பருவத்தில் அல்லது ஏதாவது ஒரு சூழ்நிலையில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, தற்போது வரை ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து RBI எனப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கூறும் கருத்துக்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
இந்தியாவில் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் வங்கி கணக்குகளில் ஏராளமான பணம் தேங்கியுள்ளது. அப்படி உள்ள பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பதற்காக RBI சிறப்பு முகாம்களை நடத்துகிறது. 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆக்டிவாக இல்லாத வங்கி கணக்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் டெபாசிட்களை RBI, டி இ ஏ எனப்படும் கல்வி விழிப்புணர்வு நிதிக்கு மாற்றிவிடும்.
ஆக்டிவாக இல்லாத வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்காக செய்ய வேண்டியவைகள்.
1. நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருந்த வங்கியின் கிளை அல்லது குறிப்பிட்ட வங்கியின் ஏதேனும் கிளைக்கு முதலில் சொல்ல வேண்டும்.
2. ஆதார் கார்டு, பாஸ் புக், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் இவற்றில் ஏதேனும் ஒரு KYC ஆவணத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
3. நீங்கள் தற்போது வங்கியில் அளித்த ஆவணங்கள் ஏற்கனவே ஆக்டிவாக இல்லாத வங்கி கணக்குடன் பொருத்தமாக இருந்தால் வட்டியுடன் பணம் திருப்பித் தரப்படும் என RBI அறிவித்துள்ளது.
4. வங்கி கணக்கு தொடங்கிய நபர் நீங்களாக இருந்தால் உரிய ஆவணங்களை கொடுத்தது சரியாக இருந்தால் உங்களிடமே பணத்தை வங்கி திரும்ப தந்துவிடும்.
5. ஒருவேளை ஆக்டிவாக இல்லாத வங்கி கணக்கு வைத்திருந்த நபர் இறந்து விட்டால், அவருடைய NOMINEE உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த 2024 அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரை மக்கள் பயன்பெறும் வகையில் பணத்தை திரும்ப பெறுவதற்காக RBI சிறப்பு முகாம்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருவதால் அங்கு சென்றும் உரிய உதவிகளை பெறலாம்.
வங்கி கணக்கு ஆரம்பித்து பல சூழ்நிலைகளால் தொடர முடியாமல் இருப்பவர்கள், தற்போது இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.