சிறு தொழிலுக்கு உதவும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)!

Mudra loan Tamil
Mudra loan Tamil
Published on

Mudra loan Tamil - தற்போது பெருகிவரும் தேவைகள் வாழ்வு தேவைகள் பொறுத்து கடன்கள் வாங்குவது என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பெரும்பாலான குடும்பங்களில் வீடு கட்டுவது , வியாபாரத்தை பெருக்குவது மற்றும் தொழிற்சாலைகளுக்கு மூலதனம் என பல விதமான கடன்கள் பயன்பட்டு வருகிறது .

ஆனால் வங்கிகளில் வாங்கும் கடன்களில் சில சமயங்கள் பாதுகாப்பு தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மக்களின் நலனுக்காக சலுகைகளுடன் கூடிய கடன் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த வரிசையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) 2015ல் துவங்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கடன் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

பெரு நிறுவனங்கள் அல்லாத அல்லாத விவசாயம் மற்றும் சிறு , நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்களை வழங்குவது இதன் முதன்மை நோக்கமாக உள்ளது . திட்டத்தின் சலுகைகளை பெற தனி நபர்கள் முத்ரா கடனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை மனுவில் பூர்த்தி செய்ய வேண்டும். பயனாளிகளின் தகுதியை பொறுத்து அவர்கள் ₹ 10 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் கடன்களை பெறலாம்.

வங்கிகள் தரும் கடனின் விதிமுறைகளிலிருந்து மாறுபட்ட திட்டமாகிறது இது. சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதிகள், பிணையம் தேவையில்லை, செயலாக்க கட்டணங்கள் இல்லை, நிறைவான கடன் தொகை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம், குறிப்பாக நிதி அல்லது நிதி அல்லாத தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு அம்சங்களாகிறநு.

PMMY நான்கு பிரிவுகளில் கடன்களை வழங்குவது முக்கிய அம்சங்களுள் ஒன்று. தொடக்கநிலை மற்றும் ஆரம்ப கட்ட வணிகங்களுக்கு ₹50,000 வரை ஷிஷு (Shishu) பிரிவு தருகிறது. வளர்ந்து வரும் வணிகங்களுக்கு ₹50,001 முதல் ₹5 லட்சம் வரை (Kishore) கிஷோர் திட்டத்தில் பெறலாம். தருண் (Tarun) பிரிவில் நிறுவப்பட்ட நடுத்தர வணிகங்களுக்கு ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரையும் அதிக மூலதன முதலீடு தேவைப்படும் வணிகங்களுக்கு ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை தருண் பிளஸ் (Tarun Plus) லும் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
தொழில் தொடங்க உடனே வாங்க! 30% மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடன்!
Mudra loan Tamil

கடன் பெறத் தேவையான தகுதிகள்:

பண்ணை அல்லாத வருமானம் ஈட்டும் செயல்பாடுகளுக்கான வணிகத் திட்டம் மற்றும் எந்தவொரு கடனும் இல்லாத 18-65 வயதுடைய இந்திய குடிமக்கள் இதற்கு தகுதியானவர்கள். கடன் வழங்குபவர் மற்றும் கடன் வகையைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும், ஆண்டுக்கு 7.30% இலிருந்து வட்டி தொடங்குவதாக அறியப்படுகிறது. நம் வசதிக்கேற்ப திருப்பிச் செலுத்தும் வசதி உண்டு. பெரும்பாலும் 3-7 ஆண்டுகள் வரை இருக்கும் என்கிறது குறிப்புகள்.

இதன் நன்மைகள்

பாதுகாப்பற்ற கடன்களில் இருந்து விலக்கி சிறு வணிக உரிமையாளர்களுக்கு ஆபத்தை குறைக்கின்றன. மலிவான கடன் செலவுகளைக் குறைக்க உதவுகிறது

நமது வசதிகேற்ப திருப்பி செலுத்தும் அடுக்கு கடன் அமைப்பு வெவ்வேறு வணிக நிலைகளின் குறிப்பிட்ட நிதித் தேவைகளுடன் பொருந்துகிறது. மேலும் மைக்ரோ யூனிட்களுக்கான கடன் உத்தரவாத நிதி (CGFMU) இந்த கடன் திட்டம் உதவுகிறது.இதனால் தொழில்முனைவோர் மற்றும் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

தேவையான ஆவணங்கள்

அடையாளச் சான்றாக ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட், முகவரிச் சான்றுக்கான பயன்பாட்டு பில்கள், வாடகை ஒப்பந்தங்கள் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்கள், வணிகச் சான்றுக்கு பதிவுச் சான்றிதழ்கள், வர்த்தக உரிமங்கள், GST சான்றிதழ்கள் அல்லது கடந்த 6 மாத வங்கி அறிக்கைகள் தேவையான ஆவணங்களாக குறிப்பிடப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான வங்கி அல்லது NBFCயின் அருகிலுள்ள கிளையை தேவையான ஆவணங்களுடன் அணுகி முத்ரா கடன் விண்ணப்பப் படிவத்தை முறையாக நிரப்பி சமர்ப்பிக்கலாம். அல்லது உத்யம்மித்ரா போர்டல் அல்லது வங்கி வலைத்தளங்கள் (https://www.mudra.org.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிகளும் தற்போது உண்டு.

முத்ரா கடன்கள் சிறு உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், பழம் மற்றும் காய்கறி வியாபாரிகள், கடைக்காரர்கள் ,விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தனி நபர்களுக்கு அதிக கடன் வட்டியில் சிக்காமல் பாதுகாப்பு தரும் கடனாக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com