மியூச்சுவல் ஃபண்டில் செல்ஃப் லாக்-இன்: முதலீட்டைப் பாதுகாக்கும் புதிய அம்சம்!

சந்தை சரிவிலும் உங்கள் பணத்தை பத்திரமாக வைத்திருக்க உதவும் எளிய வழிமுறை.
செல்ஃப் லாக்-இன் - Self Lock in, Mutual Fund India
செல்ஃப் லாக்-இன் - Self Lock in, Mutual Fund IndiaAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கங்களால் உணர்ச்சிவசப்பட்டு முதலீட்டை பாதியிலே நிறுத்தாமல் இருக்க, தாங்களே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை பூட்டி வைக்கும் சுய கட்டுப்பாட்டு முறையே செல்ஃப் லாக்இன். MF Central தளத்தில் செயல்படும் இந்த வசதி, SIP மற்றும் நீண்டகால இலக்குகளை பாதுகாத்து, காம்பவுண்டிங் பலனை முழுமையாகப்பெற உதவுகிறது; அவசரத் தேவையில் அன்-லாக் செய்து பணம் எடுக்கலாம்.

செல்ஃப் லாக்-இன் என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வசதியாகும். செல்ஃப் லாக்இன் (Self Lock-in) என்பது மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு பயந்து முதலீட்டை பாதியிலேயே நிறுத்தாமல் இருக்கத் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் ஒரு நிதி அணுகுமுறை அல்லது உத்தியாகும்.

இது அவர்களது முதலீட்டை தாங்களாகவே முன்வந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பூட்டி (lock) வைக்கும் முறையாகும். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் முதலீட்டை எடுக்க முடியாது.

லாக்-இன் காலத்தில் அவசரத்தேவைக்கு பணம் தேவைப்பட்டால், முதலீட்டாளர் அந்த லாக்-இன் காலத்தை ரத்து செய்துவிட்டு (Unlock) பணத்தை எடுக்கலாம். அதாவது பணத்தை திரும்பப்பெற முதலில்

அன்-லாக் செய்ய வேண்டும். இது MF Central போன்ற தளங்கள் மூலம் செய்யப்படும்.

MF Central என்பது இந்தியாவின் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளையும் ஒரே இடத்தில் நிர்வகப் பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த இணையதளமாகும். இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான SEBI மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சங்கம் (AMFI) வழிகாட்டுதலின்படி இந்தியாவின் முன்னணி RTA-க்களான CAMS மற்றும் KFintech ஆகிய இரண்டும் இணைந்து இந்த தளத்தை உருவாக்கியுள்ளன.

செல்ஃப் லாக்-இன் - Self Lock in, Mutual Fund India
செல்ஃப் லாக்-இன் - Self Lock in, Mutual Fund IndiaAI Image

ஏன் இந்த செல்ஃப் லாக்இன் வசதி கொண்டு வரப்படுகிறது?

குழந்தைகளின் உயர்கல்வி, ஓய்வூதியம், சொந்த வீடு வாங்குவது போன்ற நீண்ட கால இலக்குகளுக்காக முதலீடு செய்பவர்கள் செல்ஃப் லாக்இன் முறையைப் பின்பற்றுவது நல்ல பழக்கமாக இருக்கும்.

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பலர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், சந்தை ஏற்ற இறக்கங்களின் பொழுது உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதுதான்.

பங்கு சந்தை சரிந்தால் பயந்துபோய் முதலீட்டை நிறுத்துவது அல்லது பணத்தை எடுத்துவிடுவது போன்ற செயல்கள் நீண்டகால செல்வ உருவாக்கத்தை பாதிக்கக்கூடும். இதற்கு ஒரு நல்ல தீர்வாகத் தான் இந்த செல்ஃப் லாக்இன் என்ற அணுகுமுறை பார்க்கப்படுகிறது.

திடீர் செலவுகளுக்காக முதலீட்டை உடைக்கும் பழக்கத்தை குறைப்பதற்கும், நீண்ட கால திட்டத்தை பாதியில் நிறுத்துவதை தடுப்பதற்கும், முதலீட்டாளர்களின் உணர்ச்சி அடிப்படையிலான முடிவுகளை கட்டுப்படுத்தவும் இந்த வசதி கொண்டு வரப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்க SIP-ஐ நிப்பாட்ட போறீங்களா… முட்டாள்தனம் பண்ணாதீங்க. இதை முதலில் படிங்க!
செல்ஃப் லாக்-இன் - Self Lock in, Mutual Fund India

இதன் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

இது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விதிக்கும் கட்டாய லாக்இன் காலம் (Lock-in period) கிடையாது. மாறாக முதலீட்டாளர் தனது நீண்டகால இலக்குகளை அடைய, தானாகவே விதித்துக் கொள்ளும் சுய கட்டுப்பாடாகும். அதாவது தன்னிச்சையாக தனது முதலீட்டைத் திரும்ப எடுக்காமல் இருக்கச் செய்யும் ஏற்பாடாகும்.

அத்தியாவசியமற்ற மற்றும் திடீர் தேவைகளுக்காக முதலீட்டை முறிக்கும் பழக்கத்தைக் குறைக்கிறது.

முதலீட்டாளர்களிடம் நீண்டகால நிதி ஒழுங்கை உருவாக்குகிறது.

பங்குச் சந்தை சரியும்பொழுது ஏற்படும் பயத்தால் முதலீட்டாளர்கள் தங்கள் நிதியை விற்பனை செய்வதைத் (panic selling) தவிர்க்க இது உதவுகிறது. சந்தை சரியும்பொழுது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்த்து, SIP போன்ற முதலீடுகளைத் தடையின்றி தொடரவும், காம்பவுண்டிங் (கூட்டு வட்டி) பலன்களை முழுமையாக அடையவும், தொடர்ந்து நீண்டகால லாபத்தை அடையவும் இது பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சம்பளம் வந்த உடனே இத பண்ணிடுங்க…. அப்புறம் நீங்க தான் உலகத்துல பெரிய பணக்காரர்!
செல்ஃப் லாக்-இன் - Self Lock in, Mutual Fund India

அவசரப்பட்டு முதலீட்டை விற்காமல் இருக்கவும், ஒழுக்கமான முதலீட்டுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதன் மூலம் நீண்ட கால நோக்கில் நல்ல லாபத்தையும், முதலீட்டு இலக்குகளையும் எளிதாக அடையமுடியும்.

சைபர் பாதுகாப்பு: போலியோக்கள் ஹேக் செய்யப்படுவதோ அல்லது அங்கீகரிக்கப்படாத முறையற்ற பணப்பரிமாற்றங்கள் நடப்பதோ இதன் மூலம் முழுமையாகத் தடுக்கப்படுகிறது.

இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களின் போது பதற்றமடையாமல் உங்களது நீண்டகால நிதி இலக்குகளை தடையின்றி அடைவதற்கான தெளிவான முதலீட்டு உத்தியை நீங்கள் பெறுவீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Referene:

logo
Kalki Online
kalkionline.com