வருமான வரிக்கான இணையதளத்தில் புதிய வசதிகள் அறிமுகம்!

Income Tax Website.
Income Tax Website.
Published on

வருமான வரி இணையதள பக்கத்தில் புதிய வசதிகள் அறிமுகம்.

இந்திய அரசை இயக்கக்கூடிய முக்கிய வருவாய்களில் ஒன்று வருமான வரி. வருமானவரி பல்வேறு படிநிலைகளைக் கொண்டது. வருமான வரி தாக்கல் செய்ய விரும்புவோர் முதலில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். பிறகு உறுதி செய்யப்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு உறுதி செய்யப்படும். மேலும் வருமான வரி தாக்கல் நடவடிக்கையை எளிதாக்கும் பொருட்டு இணை வழியாக வருமான வரி கணக்கு தொடங்க மற்றும் செலுத்த என்று பல்வேறு வகை அம்சங்களை தொடர்ச்சியாக வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெரிஃபை செய்யப்படாத வருமான வரி கணக்கு வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு அம்சங்கள் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்து இருக்கிறது. இவ்வாறு வெரிஃபை செய்யப்படாத கணக்கு வைத்திருப்பவர்கள் இணைய வழியாகவே வருமான வரி தாக்கல் கணக்கை ரத்து செய்ய முடியும். பிறகு மீண்டும் அதை திருத்தம் செய்து கொள்ளவும் வசதி, புதிய கணக்கை தாக்கல் செய்யும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பிழைகள், தவறுகள், திருத்தம் செய்யப்படுவதோடு, வருமான வரி செலுத்துபவர்களுக்காக பணி மிகவும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வருடா வருடம் வருமான வரி சரியாக செலுத்துவதில் உள்ள 10 பயன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!
Income Tax Website.

இந்த புதிய இணைய அம்சம் 2023 - 24 ஆம் நிதி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ரத்து செய்யப்பட்ட கணக்கை மீண்டும் புதிய கணக்காக தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com