வருடா வருடம் வருமான வரி சரியாக செலுத்துவதில் உள்ள 10 பயன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

Income Tax Return File
Income Tax Return File

வருடா வருடம் வருமான வரி சரியாக செலுத்துவதில் உள்ள 10 பயன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வருமான வரி செலுத்துவதென்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஆண்டு வருமானம் வருமான வரி வரம்பான 2.5 இலட்சத்திற்கும் குறைவாக இருந்தாலும் கூட, வரியில்லாத வருமான வரி தாக்கல்(Nil Tax Return) செய்வது நல்லது.

வருடா வருடம் வருமான வரி சரியாக தாக்கல் செய்வது நம் வாழ்க்கைக்கு பல சந்தர்ப்பங்களிலும் உதவும். அவற்றுள் தலையாய 10 பயன்களைப் பார்க்கலாம்.

1. எந்த ஒரு கடன் வாங்கினாலும், கடந்த சில வருடங்களுக்கான வரி தாக்கல் செய்ததற்கான அத்தாட்சி கேட்பார்கள்.

2. காலவரையுள்ள காப்பீடு (Term insurance) போன்ற திட்டங்களை எடுக்கும்போது, உங்களுடைய வரி தாக்கல் வரலாற்றினைக் கேட்பார்கள்.

3. சுற்றுலாவிற்காகவோ அல்லது வேறுகாரணங் களுக்காக வெளிநாடு பயணம் செய்ய விரும்பினால், உங்களது வரி தாக்கல் வரலாற்றினை வெளிநாட்டு தூதரகங்கள் கேட்கும்.

4. சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், உங்களது கடந்த கால வரி தாக்கல் வரலாற்றினைக் கேட்பார்கள்.

5. உங்களுடைய வரி தாக்கலானது, உங்களுடைய வருடாந்திர வருமானத்தினை முழுவதாக காட்டும். அதனால்,  நீங்கள் அரசாங்கத்தின் எந்த ஒரு திட்டத்திலும் குத்தகை எடுக்க விரும்பினால், உங்களது கடந்த கால வரி தாக்கல் வரலாற்றினைக் கேட்பார்கள்.

இதையும் படியுங்கள்:
பண வரவு தரும் வெற்றிலை தீபம்!
Income Tax Return File

6. சம்பாதிக்கும் நபர் ஏதேனும் விபத்தில் இறந்தால், அவருக்கான நஷ்டஈடு, அவரது கடந்த கால வரி தாக்கல் வரலாற்றினைக் கொண்டுதான் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும்.

7. அரசாங்கத்தின் சில பொறுப்புகளில் சேருவதற்கு, (உதாரணமாக சட்டம் சம்பந்தப்பட்ட பொறுப்புகளில்) கடந்த கால வரி தாக்கல் வரலாறு தேவைப்படும்.

8. எதிர்காலத்தில் வருமான வரி தாக்கல் செய்யும்போது, முந்திய வருடத்தில் ஏற்பட்ட பண இழப்புகளை கணக்கில் காட்டி, வரி குறைப்பு செய்வதற்கு  பயன்படுத்த முடியும். இதற்கு வருடா வருடம் சரியாக வரி தாக்கல் செய்ய வேண்டும்.

Nil Tax Return
Nil Tax Return

9. எதிர்காலத்தில் சுயதொழில் செய்தால், உங்களது கடந்த கால வரி தாக்கல்கள், உங்களது எந்த ஒரு நிதி சம்பந்தமான வேலைகளுக்கும் உதவும்.

10. சில காரணங்களால் வருமான வரியினை வருடா வருடம் செலுத்தாத பட்சத்தில், எதிர்காலத்தில் வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்யும் போது, முந்திய வருடங்களின் பாக்கி வரித் தொகைக்கு அபராத வட்டி என்று மிக‍ அதிகமாக வருமான வரி செலுத்த நேரும். எனவே, முறையாக வருமான வரி தாக்கல் செய்துவந்தால், எதிர்காலத்தில் அபராதக் கட்டணங்களைத் தவிர்க்க முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில், கிட்டத்தட்ட 6% மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். அமெரிக்காவில், 45% மக்கள் வருமான வரி செலுத்துகிறார்கள். நமது வரிப் பணம்தான், அரசாங்க மருத்துவமனை, அரசாங்கப் பள்ளிகள், காவல், இராணுவம், அரசாங்க திட்டங்கள் என்று பல்வேறு வழிகளில் செலவாகிறது. எனவே, வருமான வரி கட்டாயம் செலுத்த வேண்டும். அதுவும் ஒரு சமுதாயக் கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com