2,000 ரூபாய்க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு!


UPI transaction
UPI transaction
Published on

டிஜிட்டல் மோசடியை தடுக்க யுபிஐ பரிவர்த்தனையில் 2,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைக்கு காத்திருப்பு அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையில் நடைபெறும் மோசடியை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கூகுள், யுபிஐ பரிவர்த்தனை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு திட்டங்கள் வகுக்கப் பட்டிருக்கின்றன. மோசடிகள் கண்டறியப்பட்டவுடன் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தை தக்க வைக்க அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, விரைவான செயல்பாட்டை முன்னெடுப்பது, யுபிஐ பரிவர்த்தனையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக யுபிஐ பரிவர்த்தனையில் 2000 ரூபாய்க்கு மேல் முதல் முறையாக பரிவர்த்தனை செய்யப்படும் பொழுது 4 மணி நேர காத்திருப்பு அவகாசம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி மோசடி நடைபெற்று இருக்கும் லட்சத்தில் காத்திருப்பு அவகாச நேரத்தை பயன்படுத்தி பண பரிமாற்றத்தை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பெண்களின் உடல் நலத்தில் பெரும் பங்காற்றும் அவகோடா பழம்!

UPI transaction

மேலும், யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் குறுஞ்செய்தி வாழியாக கணக்காளருக்கு உறுதிப்படுத்துவது. மோசடி அழைப்புகள், லிங்க்குகள் மூலம் நடக்கும் முறைகேடுகளை கடக்க மோசடி தொடர்பான புகார்கள் வந்தவுடன் சம்பந்தப்பட்ட எண்களை முடக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com