

புது புது ஆண்டுகள் மலரும்போது கூடவே புது அறிவிப்புகளும் பின்னால் வந்துவிடும். இது முன்கூட்டியே அதாவது 2025ல் அறிவிக்கப்பட்டிருந்தாலும்; சற்று அதைப் பற்றிய ஒரு நினைவூட்டலைப் பார்க்கலாம்.
ஊழியர்களின் சம்பளம்: வீடுகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகங்களில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை சீர்திருத்தங்களுடன் 2026ஆம் ஆண்டில் இந்த ஜனவரியில் இருந்து நிகழப்போகிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் 8வது ஊதியக் குழுவைச் செயல்படுத்துவதாகும் (implementation of the 8th Pay Commission).
இது மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் மாற்றங்களை உண்டாக்குகிறது. இதனுடன் அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு பணவீக்கத்திற்கு எதிராக ஒரு ஆறுதலையும் தருகிறது. இதனால் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு அவர்கள் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கிறது.
வரிகள்:
வரி விதிகள் கணிசமாகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1 முதல், திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி வருமானங்கள் (revised and belated income tax returns) இனி அனுமதிக்கப்படாது.
இதனால் வரி செலுத்துவோர் புதிதாக வந்த வருமானம் (ITR-U) விருப்ப விதிகளை மட்டுமே பயன்படுத்தமுடியுமாம். இந்த நடவடிக்கை தவறு நடக்கும் ஓட்டைகளை(Loopholes) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக PAN-ஆதார் இணைப்பு கட்டாயமாகிவிட்டது. இணைப்படாத PAN கார்டுகள் இனிமேல் வங்கி மற்றும் அரசு சேவைகளில் செயல்படாமல் போகலாம்.
வங்கி பரிவர்த்தனைகள்:
வங்கி வாடிக்கையாளர்கள் விரைவான கடன் மதிப்பெண் அளவுகள் (faster credit score updates), டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பற்றி இனிமேல் கடுமையாகக் கண்காணிக்கப்படுவார்கள். இது நிதி விஷயங்களில் அனைத்து குடிமக்களின் வெளிப்படைத்தன்மையைப் பிரதிபலிக்கப் போகிறது. வணிக (Commercial) LPG விலை உயர்வால் வீட்டு வரவு செலவுத் திட்டங்களில் மாற்றம் எழக்கூடும். அதேநேரத்தில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளில் (REITகள்) வரப்போகும் புதிய விதிகள்; முதலீட்டு வாய்ப்புகளை மறு வடிவமைக்கப் போகின்றன.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில்:
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பல மாற்றங்கள் தொடங்கப்பட உள்ளன. ஜனவரி இறுதிக்குள் எதிர்பார்க்கப்படும் பாரத் டாக்ஸி செயலி (Bharat Taxi app); ஒரு பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சேவைகளுடன் நகர்ப்புற போக்குவரத்தை நெறிப்படுத்தும்.
பிரதம மந்திரி கிசான் (PM Kisan scheme) திட்டத்தில் வரும் சீர்திருத்தங்களால் விவசாயிகளுக்கான பல பலன்கள் காத்திருக்கின்றன. இப்போது வரக்கூடிய சலுகைகளை அணுக ஒரு தனித்துவமான கிசான் ஐடி (Kisan ID) இதற்கு தேவைப்படுகிறது.
வாகன ஒழுங்குமுறை புது அறிவிப்புகள் (Vehicle regulation updates) மற்றும் டிஜிட்டல் கட்டண இணக்க விதிகளும் (digital payment compliance rules) போன்றவையும் வருகின்றன.