ATM-ல் பணம் இல்லையா? இனி கவலை வேண்டாம்.. அருகில் உள்ள கடையில் வாங்கிக் கொள்ளலாம்!

ATM Machine.
ATM Machine.

அவசரத்திற்கு பணம் எடுக்கலாம் என ஏடிஎம் சென்றால் அதில் பணம் இல்லையா? இனி அந்த கவலை வேண்டாம். கையில் மொபைல் போன் வைத்திருந்தால் போதும் தேவையான பணத்தை வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றத்தைப் பார்த்தால் எதிர்காலத்தில் இந்த உலகம் எப்படி எல்லாம் மாறிவிடுமோ? என்று யோசிக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக நிதித் துறையானது வேகமாக மேம்படுத்தல்களைக் கண்டு வரும் நிலையில், யுபிஐ வந்த பிறகு பணப் பரிவர்த்தனைகள் எளிதாக மாறிவிட்டன. இன்டர்நெட் கனெக்சன் இருந்தால் போதும் எவ்வித சிரமமும் இன்றி உடனடியாக யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.

இதனால், நாம் வெளியே செல்லும்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அனைத்தையும் கையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் நாம் எங்கேயாவது வெளியே செல்லும்போது அவசரத்திற்கு பணம் தேவை என்றால் உடனடியாக ஏடிஎம்முக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவே அருகில் ஏடிஎம் இயந்திரம் இல்லையென்றால் திண்டாட்டம் தான். அப்படியும் சில இடங்களில் ஏடிஎம் இயந்திரம் இருந்தாலும், அதில் பணம் இல்லை என்றால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது.

ஆனால் இனி இந்த சிரமம் இல்லை. உங்கள் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் அருகில் உள்ள கடையில் உங்களுக்கு வேண்டிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை பேமெண்ட் இந்தியா எனக் கூறுகிறார்கள். இத்தகைய விர்ச்சுவல், கார்ட்லெஸ், ஹார்ட்வேர்லெஸ் பணப்பரிமாற்றத்தை சண்டிகரை சேர்ந்த பின்டெக் நிறுவனம் வழங்குகிறது.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்களிடம் இருக்க வேண்டியது ஸ்மார்ட் போன், இன்டர்நெட் வசதி மற்றும் மொபைல் பேங்கிங். முதலில் மொபைல் பேங்கிங் செயலியில் நீங்கள் பணத்தை மற்றொரு நபரிடமிருந்து பெறுவதற்கான கோரிக்கையை வைத்தால், அதை ஏற்றுக் கொண்டதற்கான ஒரு ஓடிபி உங்களுக்கு அனுப்பப்படும். இந்த ஓடிபியை இந்த அம்சத்தில் இணைக்கப்பட்ட அருகில் உள்ள கடைக்காரரிடம் கொண்டு போய் காட்டினால் அதற்கான பணத்தை அவர் கொடுப்பார்.

இதையும் படியுங்கள்:
ATM கார்டு பயன் படுத்துகிறீர்களா? அப்ப 10 லட்சம் வரை இலவச காப்பீடு இருப்பது தெரியுமா?
ATM Machine.

உங்கள் மொபைல் பேங்கிங் செயலிலேயே உங்கள் அருகில் இருக்கும் எந்தெந்த கடைகளில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது காட்டப்படும். இந்த முறையில் ஒரு கடைக்காரர் விருச்சுவல் ATM ஆக செயல்படுகிறார். தற்போது இந்த அம்சமானது ஹைதராபாத், சென்னை, மும்பை, சண்டிகர், தில்லி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. பல கடைக்காரர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி விச்சுவல் ஏடிஎம் மையங்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள பயனர்கள் யாரும் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இப்போது குறிப்பிட்ட சில வங்கிகள் மட்டுமே இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. வரும் மே மாதத்திற்குள் பெரும்பாலான இடங்களில் இந்த அம்சத்தைக் கொண்டுவர பின்டெக் நிறுவனம் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்த அம்சத்தால் பணப் பரிமாற்றம் மேலும் எளிதாகும் என நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com