நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய நிதி பாடம்!

Credit Cards
Credit Cards
Published on

கிரெடிட் கார்டு பயன்பாட்டை தவிர்ப்பது (Credit Cards) நம் நிதி சுதந்திரத்திற்கு ஒரு சிறந்த முடிவாகும். காரணம் கிரெடிட் கார்டுகள் நம்மிடம் இல்லாத பணத்தை செலவழிக்கத் தூண்டுகின்றன. இதனால் தேவையில்லாத பொருட்களை வாங்கி பின்னாளில் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது. கிரெடிட் கார்டுக்கு நோ சொல்வது என்பது கடன் வலையில் சிக்காமல் இருக்க, பணத்தை நிர்வகிக்க, தேவையற்ற செலவுகளை தவிர்க்க உதவும்.

ஏன் கிரெடிட் கார்டுக்கு நோ சொல்ல வேண்டும்?

அதிக வட்டி மற்றும் கட்டணங்கள் காரணமாக கடன் சுமை அதிகரிக்கலாம். வசதியாக இருப்பதால், தேவைக்கு அதிகமாக செலவு செய்யத் தூண்டும்.

கடன் இல்லாத வாழ்க்கை மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும்.

டெபிட் கார்டு அல்லது ரொக்கம் நம்மை பட்ஜெட்டுக்குள் இருக்க உதவும்.

கிரெடிட் கார்டுக்கு நோ சொல்லும் வழிகள்:

இதற்கு வருமானத்திற்கு ஏற்ற பட்ஜெட் போடுவதுடன் செலவுகளுக்கு வரம்பு நிர்ணயம் செய்வதும், சிறிய அன்றாட செலவுகளுக்கு ரொக்கத்தை பயன்படுத்துவதும் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். செலவுகளைத் தொடர்ந்து கண்காணித்து தேவையில்லாதவற்றை தவிர்க்கலாம். கிரெடிட் கார்டை அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது போன்ற வழிகள் உள்ளன. இதன் மூலம் நிதி ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

கிரெடிட் கார்டு பயன்பாட்டை தவிர்க்க வேண்டியதன் முக்கிய காரணங்கள்:

உரிய நேரத்தில் பணத்தைச் செலுத்தத் தவறினால் 36% முதல் 48% வரை மிக அதிக வட்டி வசூலிக்கப்படும். இது நம் சேமிப்பை காலி செய்து விடும். ஆண்டு கட்டணம் (annual fees), தாமதக் கட்டணம் (late payment fees) மற்றும் ஜிஎஸ்டி (GST) எனப் பல மறைமுகக் கட்டணங்கள் நம் சுமையை அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் பில் கட்ட வேண்டுமே என்ற கவலை நம் நிம்மதியை வெகுவாகக் குறைக்கும்.

அதற்கு பதிலாக டெபிட் கார்டை (debit card) பயன்படுத்தலாம். இது நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மட்டும் செலவழிப்பதால் பாதுகாப்பானது. திடீர் தேவைகளுக்காக சிறிய அளவில் தொகையை சேமித்து வைப்பதும் அவசர காலங்களில் உதவும்.

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்டு என்னும் குதிரை: கடிவாளம் நம் கையில்!
Credit Cards

கிரெடிட் கார்டுக்கு நோ சொல்லும் மினிமலிசம்:

கிரெடிட் கார்டு பயன்பாட்டை அறவே நீக்குவது பணத்தை சேமிக்க உதவும். கடன் வாங்கத் தூண்டாது. நமக்கு அவசியம் தேவையானதை மட்டுமே வாங்குவதன் மூலமும், நம் செலவில் கவனம் செலுத்துவதன் மூலமும் நம் சக்திக்கு மீறி வாங்குவதைத் தவிர்க்கலாம்.

இது தேவையற்ற பொருட்களை வாங்கி பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதை விட்டு விலகி, அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட நமக்கு அதிக வாய்ப்பை அளிக்கிறது. அத்துடன் நம் விருப்பங்களைப் பின்தொடர்ந்து, உண்மையிலேயே முக்கியமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

கிரெடிட் கார்டு என்பதை சரியாக பயன்படுத்த தெரிந்தால் மட்டுமே பலன்கள் உண்டு. இல்லையென்றால் அது நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com