பென்ஷன் மட்டும் இல்ல.. இனி மருத்துவ செலவும் ஃப்ரீ! NPS-ல் வந்த "ஸ்வஸ்தியா" - முழு விவரம்!

nps swasthya pension scheme
nps swasthya pension scheme
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

என்.பி.எஸ் ஸ்வஸ்தியா பென்ஷன் திட்டம் (NPS Swasthya Pension Scheme) என்பது PFRDAவால் அறிமுகப்படுத்தப்பட்ட, ஓய்வூதியத்துடன் மருத்துவ செலவுகளுக்கான ஆதரவையும் இணைத்து வழங்கப்படும் ஒரு புதிய பரிசோதனை முயற்சி திட்டமாகும். இந்தத் திட்டம் என்.பி.எஸ்-ன் கீழ் 60 வயதுக்கு பிந்தைய ஓய்வூதிய சேமிப்பை, மருத்துவ செலவுகளுக்கான நிதி ஆதாரத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ஜனவரி 2026 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய சுகாதாரம் இணைந்த ஓய்வூதிய திட்டமாகும். இந்தத் திட்டம் தேசிய ஓய்வூதிய அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இது சந்தாதாரர்கள் தங்களின் மருத்துவ செலவுகளுக்காக பிரத்தியேகமாக நிதியை சேமிக்க அனுமதிக்கிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

மருத்துவ ஆதரவு:

தற்போதுள்ள என் பி எஸ் கட்டமைப்பில் சந்தாதாரர்களின் மருத்துவச் செலவு தேவைகளுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும். ஓய்வூதிய சேமிப்பைக்கொண்டே மருத்துவ செலவுகளையும் சமாளிக்கும் வகையில் இந்த 'பல்கூட்டு திட்டக் கட்டமைப்பின்' கீழ் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் நோக்கம் வெளி நோயாளி(OPD) மற்றும் உள் நோயாளி(மருத்துவமனையில்) மருத்துவ கட்டணங்களை செலுத்த உதவுதல். இத்திட்டத்தில் இந்தியாவின் எந்த குடிமகனும் இதில் சேரலாம். இருப்பினும் ஸ்வஸ்த்யா கணக்கை திறக்க வழக்கமான என்பிஎஸ் கணக்கு இருக்க வேண்டும்.

பரிசோதனைத் திட்டம் (Pilot Project): இது தற்போது ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ் (Regulatory Sandbox) கட்டமைப்பின் கீழ் கருத்துச் சான்றாக (PoC) செயல்படுத்தப்படுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் தங்களின் பொதுவான என் பி எஸ் கணக்கிலிருந்து 30% வரை நிதியை இந்த ஸ்வஸ்த்யா கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நிதி மேலாண்மை: பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான பாடம்!
nps swasthya pension scheme

இந்தத் திட்டத்தின் முக்கிய நன்மை சுகாதார தேவைகளுக்காக பணத்தை எடுக்கும் திறனாகும். உங்கள் சொந்த பங்களிப்புகளில் 25% வரை எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம். வழக்கமான என் பி எஸ் போல் அல்லாமல், இதற்கு காத்திருப்பு காலம் இல்லை. உங்கள் முதல் பணத்தை எடுப்பதற்கு கணக்கில் குறைந்தபட்சம் ரூபாய் 50,000 இருப்பு இருக்கவேண்டும்.

மருத்துவமனைக் கட்டணம் மிக அதிகமாக இருந்தால் மொத்தத் தொகையாக 100% பணத்தையும் எடுக்கலாம். இது ஒரு சோதனை ஓட்டம் என்பதால் எதிர்காலத்தில் இதைத் தொடர முடியவில்லை என்றாலும், இத்திட்டம் நிறுத்தப்பட்டாலும் உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன் உங்கள் வழக்கமான NPS கணக்கிற்கு மீண்டும் மாற்றப்படும்.

ஓய்வுக்குப் பிறகு நிதி நிலைத்தன்மையுடன் மருத்துவ செலவுகளுக்கும் உறுதியளிக்க இந்த திட்டம் உதவுகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மூலம் இத்திட்டம் நிர்வகிக்கப் படுகிறது.

இது தற்போது ஒரு சோதனை முயற்சியாக, வரையறுக்கப் பட்ட எண்ணிக்கையிலான பயனர்களுடன் தொடங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் மருத்துவ கோரிக்கைகளுக்கான தொகை நேரடியாக மருத்துவமனை அல்லது காப்பீட்டு நிர்வாகிகளுக்கு செலுத்தப்படும்.

logo
Kalki Online
kalkionline.com