நிதி மேலாண்மை: பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான பாடம்!


Financial management
Financial management
Published on

பொருளாதாரம் என்றால் பொருள் + ஆதாரம் என்று பொருள். நம்மிடம் இருக்கும் பொருளையும் பணத்தையும் சொத்தையும் நகையையும் வைத்துதான் நம்முடைய பொருளாதாரத்தின் நிலையை தீர்மானிக்கப்படுகிறது. அதாவது நம்மிடம் இருக்கும் living assets மற்றும் non living assets ஐ வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

சரி, நம்மிடம் பணமோ அல்லது பொருளோ சேமித்திருந்தால்தானே நல்ல பொருளாதார நிலையை அடையமுடியும்.

இந்த நிலையை அடைய நமக்கு சில முக்கியமான மற்றும் சரியான ஆதாரங்கள் தேவை. நம்முடைய வாழ்க்கை யிலும் சரி, குடும்பத்திலும் சரி, அப்படிபட்ட ஆதாரங்கள் சரியான முறையில் இருந்தால் பொருளாதார நிலையும் சீராக இருக்கும். நான் கூறும் இந்த ஆதாரங்கள் லட்சாதிபதிகளுக்கோ அல்லது கோடீஸ்வரர் களுக்கோ இல்லை, சாதாரணமான வாழ்க்கையை வாழும் மிடில் கிலாஸ் மக்களுக்கும் குடிசை மக்களுக்கும்தான் இது முக்கியமாக தேவைப்படும். சரி இப்போது அந்த ஆதாரங்களை பார்க்கலாமா?

முதலில் ஆண்களை எடுத்துகொள்வோம். ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு நல்ல ஆதாரங்களாக திகழக் கடியவர்கள் மூன்று பேர்தான், அதாவது தாய், தந்தை மற்றும் மனைவி. இந்த மூன்று பேரும் நல்ல விதத்தில் ஒரு பெரிய ஆதாரமாக அவர்களுக்கு அமைந்து விட்டால் போதும், அவர்களுடைய பொருளாதார நிலைமை என்றுமே சீராக இருக்கும்.

ஆண்மகனைப் பொறுத்த வரையில் குழந்தை பருவத்திலிருந்தே பொருளாதாரத்தை பற்றி அவனுடைய பெற்றோர்கள் சரியான முறையை கற்பிக்கவேண்டும். பெற்றோர்கள் இருவருமே பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மகனுக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டும். அவனுக்கு திருமணம் ஆன பிறகும் மனைவியும் அவனுடைய பெற்றோர்களைப் போலவே ஆடம்பரமில்லாமல் சிக்கனமாக செலவழித்து அதே முறையை பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்கும் பட்சத்தில் அந்த ஆண் மகனுடைய பொருளாதாரம் என்றுமே சீரழியாது. இந்த காரணத்தினால்தான் ஆண்களை பொறுத்த வரையில் தாய்க்கு பின் தாரம் என்று கூறுவார்கள். ஆகவே, ஆண்களை பொறுத்த வரையில் தாய், தந்தை மற்றும் மனைவி இந்த மூன்று பேரும்தான் அவனுடைய பொருளாதாரத்திற்கு சிறந்த ஆதாரமாக திகழகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வேகத்தின் உச்சம்: பந்தயக் களத்திற்காகவே பிறந்த ரேசிங் பைக்!

Financial management

அடுத்தபடியாக பெண்களை பொறுத்த வரையில் ஆதாரங்களாக பல பேர் திகழ்கிறார்கள். ஒரு பெண்ணின் பொருளாதார நிலையை சீராக வைப்பதில் ஆண்களைவிட சற்று கடினமாகவே இருக்கிறதென்றே சொல்லலாம். பெண்களுக்கு ஆதாரமாக திகழ்பவர்கள் பெற்றோர்கள், கணவன், சகோதரன் மற்றும் குழந்தைகள்.

ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆவதற்கு முன்னால் கண்டிப்பாக அவளுடைய தாய், தந்தை மற்றும் சகோதரன் நிதி நிலைமையை சீராக வைப்பதில் பெரிய ஆதாரங்களாக திகழ்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணோடு தாய் தந்தை மூத்த சகோதரனோ அல்லது இளைய சகோதரனோ/சகோதரியோ இருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். இதில் தாயோ அல்லது தந்தையோ ஊதாரித் தனமாக செலவழிக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம்.

அப்போது குடும்ப நிர்வாக பொறுப்பு மூத்த சகோதரனிடம் வருகிறது. அவனும் சம்பாதிக்காமல் தங்கைதான் சம்பாதிக்கிறாளே என்றெண்ணி ஊரை சுற்றினால் என்னவாகும்? அந்த பெண் சம்பாதிக்கும் பணம் முழுவதும் கரைந்துவிடும். ஒருவேளை அவளுக்கு இளைய சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்து, தாய் தந்தையர் சரியாக இல்லை என்றால் அவனை/அவளை படிக்க வைக்கும் பொறுப்பு இவள் தலையில்தான் விழும்.

திருமணத்திற்கு பிறகு அவளுடைய பொருளாதார நிலையின் முக்கிய ஆதாரமாக இருப்பது அவளுடைய கணவன்தான். அவளுக்கு தேவையான ஒத்துழைப்பையும் கொடுத்து அந்த கணவன் குடி சிகரெட் சீட்டாட்டம் போன்ற பழக்க வழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருவரும் திட்டம் போட்டு அழகாக பொருளாதாரத்தை நிர்ணயித்தால் அதன் நிலை நிச்சயமாக சீராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
'ஸ்ட்ரெஸ்' (Stress) தான் பிசினஸ்: பெண்களின் மன அழுத்தத்தை வைத்து கல்லா கட்டும் நிறுவனங்கள்!

Financial management

கணவன் இறக்கும் பட்சத்தில் மறுபடியும் அந்த பெண்ணிற்கு ஆதாரம் தேவைப்படுகிறது. ஏனென்றால் கணவன் இறந்த பிறகு அந்த வீட்டையோ அல்லது வங்கியில் இருக்கும் பணத்தையோ பொதுவாக மகன் அல்லது மகளுடைய பேருக்கு மாற்றி விடுகிறார்கள் இப்போது அந்த மகன் / மகள், அந்த வீட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றக்கூடிய ஆதாரமாக அந்தப் பெண்ணுக்கு திகழ்கிறான். ஆகவே, பெண்களுக்கு பொருளாதாரத்திற்கு எப்போதுமே சிறந்த ஆதாரம் தேவைப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com