9.5% வட்டி... வரி சலுகை! உங்கள் செல்லக் குழந்தைக்கு அரசு தரும் சூப்பர் கிஃப்ட்!

nps vatsalya scheme
nps vatsalya scheme
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

NPS Vatsalya என்பது மைனர்களுக்கு (18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்) பெற்றோர்களால் முதலீடு செய்யப்படும் திட்டமாகும். பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகள் சார்பாக சேமிக்கக் கூடிய PFRDA அமைப்பால் நிர்வகிக்கப்படும் ஒரு நீண்ட காலக் கூட்டுறவு ஓய்வூதிய திட்டமாகும். ஆண்டுக்கு ரூபாய் 1000 குறைந்தபட்ச முதலீட்டுடன், குழந்தைக்கு 18 வயது வரை சேமிக்கலாம். இது கூட்டு வட்டியின் மூலம் கணிசமான நிதி பாதுகாப்பை வழங்குகிறது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS )ஒரு உட்பிரிவாக, NPS வாத்சல்யா 18 செப்டம்பர் 2024 அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* 18 வயதுக்குட்பட்ட அனைத்து இந்திய குடிமக்களான சிறு குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். வெளிநாடு வாழ் இந்தியர் (NRI ) மற்றும் வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை(OCI) பெற்ற நபர்கள் இத் திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

* குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளின் சார்பாகக் கணக்கை திறந்து இயக்கலாம். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.

* 3 வருட லாக்-இன் காலத்திற்குப் பிறகு கல்வி(உயர்கல்வி) அல்லது குறிப்பிட்ட நோய் சிகிச்சைகளுக்காக 25% வரை திரும்பப் பெறலாம்.

* 18 வயதிற்குப் பிறகு இந்த கணக்கை சாதாரண NPS கணக்காக மாற்றிக் கொள்ளலாம் அல்லது பணத்தை எடுக்கலாம். NPS திட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து வரி சலுகைகளும் NPS வாத்சல்யா திட்டத்திற்கும் கிடைக்கும்.

* NPS வாத்சல்யா திட்டத்தின் வட்டி விகிதம் 9.5% முதல் 10% வரை இருக்கும்.

* சந்தை சார்ந்த பல முதலீட்டுத் தேர்வுகள்(Equity, Corporate Debt, Govt Bonds) உள்ளன.

* ஆரம்பத்திலேயே முதலீடு செய்வதால் நீண்ட காலத்திற்கு அதிக பலன் அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் கனவுகளை நனவாக்க முதலீடு செய்வது எப்படி? - ஒரு முழுமையான வழிகாட்டி!
nps vatsalya scheme

NPS வாசல்யா திட்டத்தை தொடங்குவது எப்படி?

PFRDA கட்டுப்பாட்டில் உள்ளதால் பாதுகாப்பானது. இதற்கு eNPS இணையதளம் மூலம் ஆன்லைனில் கணக்கைத் தொடங்கலாம். அல்லது இந்திய அஞ்சல் துறை, முக்கிய வங்கிகள், ஓய்வூதிய நிதிகள் போன்ற சேவை மையங்கள் மூலம் NPS வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கலாம்.

18 வயதிற்குப் பிறகு, இந்தத் திட்டத்தை ஒரு வழக்கமான NPS கணக்காக மாற்றுவதற்கு 3 மாதங்களுக்குள் KYC புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள்:

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்(இருந்தால்), பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கேஒய்சி (KYC) ஆவணங்கள் (ஆதார், பான் கார்டு), புகைப்படங்கள் மற்றும் வங்கி விவரங்கள் தேவை.

logo
Kalki Online
kalkionline.com