வெங்காயத்தின் அரசியல்: வெங்காய ஏற்றுமதிக்கு தடை!

Onion export ban.
Onion export ban.
Published on

வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான பண வீக்கத்தை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலில் வெங்காயம் அந்த காலம் முதல் தற்போது வரை முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், அரசியல் மீதான தொடர் விமர்சனங்களுக்கு காரணமாக மாறியது. மேலும் வெங்காயம் வாங்க லோன் வேண்டுமென்று கேட்டு மீம்ஸ்களும் சமூக வலைதளங்கள் அதிகம் பகிரப்பட்டன.

இப்படி இந்தியாவின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய வெங்காயம் வரும் காலங்களில் விலை உயர்வைக் கண்டு விட கூடாது என்பதில் ஒன்றிய அரசு மிக கவனமாக இருந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கத்தை குறைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது ஒன்றிய அரசு.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய உடனடி தடை உத்தரவு அமலுக்கு கொண்டுவரப்படுவதாக உத்தரவிட்டிருக்கிறார். தற்போது அகில இந்திய அளவில் வெங்காயத்தினுடைய சராசரி விலை 57.11 ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பிடும்பொழுது 97 சதவீத விலை உயர்வு.

இதையும் படியுங்கள்:
வெங்காய வடகம் - குழம்பு வடாம்!
Onion export ban.

மேலும் வரும் காலத்தில் வெங்காயத்தின் மீது விலை உயர்வு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், உணவுப் பொருட்களின் மீதான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார். அறிவிப்பு வெளியாகும் முன்பு பெறப்பட்ட ஆர்டர்கள் மற்றும் சுங்கத்துறை அனுமதி பெற்ற ஆர்டர்களுக்காக இருப்பில் உள்ள வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேளாண்துறை வெங்காய உற்பத்தியில் இந்தியாவின் முக்கிய பங்காற்று மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் வெங்காய உற்பத்தி நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com