பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா: விவசாயிகளின் கவசமாகும் பயிர் காப்பீட்டுத் திட்டம்!

pmfby-crop-insurance-scheme
pmfby-crop-insurance-scheme
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) பிப்ரவரி 18, 2016 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் இந்திய அரசின் முதன்மை காப்பீட்டு திட்டமாகும். இந்தத் திட்டம் வறட்சி, வெள்ளம், புயல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கு குறைந்த பிரீமியம் விகிதத்தில் விவசாயிகளுக்கு விரிவான காப்பீட்டை வழங்குகிறது.

பயிர் காப்பீடு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

*நிதியுதவி:

இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி அளித்து விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்துதல் இதன் முதன்மையான நோக்கமாகும்.

*நவீன தொழில்நுட்பம்:

செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் பயிரிழப்பு துல்லியமாக மதிப்பிடப்படுகிறது.

*வெளிப்படைத்தன்மை:

'மேரி பாலிசி மேரே ஹாத்' மூலம் காப்பீட்டு ஆவணங்கள் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

*நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். பயிர்க்கடன் பெறும் மற்றும் பெறாத அனைத்து விவசாயிகளும், சொந்த நிலத்தில் சாகுபடி செய்பவர்கள் மற்றும் குத்தகைக்காரர்களும் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

*பயிர் கவரேஜ்:

உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் ஆண்டு வணிக/ தோட்டக்கலை பயிர்கள்

*பிரீமியம் விகிதங்கள்:

விவசாயிகள் மிகக் குறைந்த பிரீமியம் தொகையை மட்டுமே செலுத்தவேண்டும். மீதமுள்ள தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. காப்பீட்டுத் தொகையில் எந்த உச்சவரம்பும் இல்லை.

*காரிஃப் பயிர்களுக்கு 2%, ராபி பயிர்களுக்கு 1.5% மற்றும் வணிக/ தோட்டக்கலை பயிர்களுக்கு 5% வரையிலும் குறைந்த பிரீமியம் விகிதத்தில் விவசாயிகளுக்கு விரிவான காப்பீட்டை வழங்குகிறது. இது விதைப்பு முதல் அறுவடை வரை (மற்றும் அறுவடைக்கு பிந்தைய இழப்பு) முழு பாதுகாப்பை உறுதிசெய்கிறது.

இதையும் படியுங்கள்:
குறைந்த முதலீடு... நிறைந்த வருமானம்! வெற்றி தரும் கைத்தொழில் ரகசியங்கள்!
pmfby-crop-insurance-scheme

*விதைப்பு தோல்வி, பயிர் சேதம், அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய இழப்புகள் மற்றும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற உள்ளூர் பேரிடர்கள் ஆகியவற்றிற்கு இழப்பீடு கிடைக்கும்.

*தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், குறிப்பாக நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து பயனடையலாம்.

*விண்ணப்பிக்கும் முறை:

விவசாயிகள் தங்களின் கிராம நிர்வாக அலுவலர்(VAO), தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, பொது சேவை மையங்கள்(CSC) அல்லது PMFBY இணையதளம் மற்றும் Crop Insurance App மூலம் விண்ணப்பிக்கலாம்.

*இதற்கு தேவையான ஆவணங்கள்:

விவசாயி அடையாள அட்டை(ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை). நிலப்பதிவு ஆவணங்கள்(சிட்டா/அடங்கல்). வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பயிர் சாகுபடி சான்றிதழ்.

logo
Kalki Online
kalkionline.com