
நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, அது வளர வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்களுக்கான சிறந்த வாய்ப்பை இந்தியன் போஸ்ட் ஆஃபீஸ் வழங்குகிறது. பல ஆண்டுகளாக, போஸ்ட் ஆஃபீஸ் முதலீடுகள் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு பெயர் பெற்றுள்ளன. அவற்றில், போஸ்ட் ஆஃபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட் (Post Office Fixed Deposi) (FD) திட்டம், வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, இருமடங்காக்கவும் உதவுகிறது. நீங்கள் புதிய முதலீட்டாளராக இருந்தாலும், அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாகும். மேலும், வெறும் ₹500 என்ற குறைந்தபட்ச முதலீட்டில் உங்கள் சேமிப்பை தொடங்க முடியும்.
Post Office Time Deposit Scheme:
போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் (POTD) என்பது குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகும்.
இந்த திட்டம், வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குவதோடு, முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. அதாவது, நீங்கள் விரும்பும் தொகையை முதலீடு செய்யலாம்.
தற்போதைய வட்டி விகிதங்கள்:
1 வருட டெபாசிட்டுக்கு: 6.9%
2 வருட டெபாசிட்டுக்கு: 7.0%
3 வருட டெபாசிட்டுக்கு: 7.1%
5 வருட டெபாசிட்டுக்கு: 7.5%
இந்த வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த முறையில், சாதாரண சேமிப்பு வங்கிகளில் இருப்பதை விட உங்கள் முதலீடு அளவு கணிசமாக அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டாக,
₹5 லட்சம் முதலீடு (5 வருடங்களுக்கு):
நீங்கள் ₹5 லட்சத்தை 5 வருடங்களுக்கு 7.5% வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், 5 வருட முடிவில் உங்கள் பணம் ₹7,24,974 ஆக வளர்ந்திருக்கும். இதில், ₹2,24,974 என்பது நீங்கள் சம்பாதித்த வட்டி.
₹5 லட்சம் முதலீடு (10 வருடங்களுக்கு):
ஒருவேளை நீங்கள் உங்கள் முதலீட்டை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்தால், மொத்த வட்டித் தொகை ₹5,51,175 ஆக அதிகரிக்கும். மொத்த முதிர்வு தொகை ₹10,51,175 ஆக இருக்கும். உங்கள் ஆரம்ப முதலீடு வெறும் 10 வருடங்களில் இரட்டிப்பாகும்.
யார் யார் முதலீடு செய்யலாம்?
தனிநபர் கணக்கு: 18 வயதுக்கு மேற்பட்ட எந்த இந்திய குடிமகனும் கணக்கு தொடங்கலாம்.
குழந்தைகளுக்கான கணக்கு: பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களாகவே கணக்கை இயக்கலாம்.
கூட்டு கணக்கு: நீங்கள் இரண்டு அல்லது மூன்று பேருடன் சேர்ந்து கூட்டு கணக்கை தொடங்கலாம். மேலும், இந்த கணக்கை எப்போது வேண்டுமானாலும் தனிப்பட்ட கணக்காக மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.
போஸ்ட் ஆஃபீஸின் பிற முதலீட்டு திட்டங்கள்:
போஸ்ட் ஆஃபீஸில் FD-யைத் தவிர வேறு பல சிறந்த முதலீட்டு திட்டங்களும் உள்ளன. தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Bond) (NSC) 5 வருடங்களுக்கு 7.7% வட்டி வழங்குகிறது. கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) (KVP) திட்டத்தில், உங்கள் பணம் 115 மாதங்களில் (9 வருடம் 7 மாதங்கள்) இரட்டிப்பாகிறது.