ரயில் டிக்கெட் ரத்து செய்யும் போது கடைபிடிக்கும் நடைமுறைகள்!

Canceling train tickets!
Canceling train tickets!
Published on

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும் பொழுது அவற்றிற்கான பணம் எவ்வாறு திருப்பி தரப்படுகிறது என்று பயனாளர்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுகிறது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஐ ஆர் சி டி சி விளக்கம் அளித்துள்ளது.

ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டு பிறகு சாட் தயாரிக்கப்பட்டால் அதை ரத்து செய்ய முடியாது. ஆனால் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவரா இல்லையா என்பதைச் சரிபார்க்க டிக்கெட் டெபாசிட் ரசீதை டிடிஆரில் தாக்கல் வேண்டும். இந்த நேரத்தில் சம்மந்தப்பட்ட நபருக்கு பணத்தை திருப்பி தருவது சம்பந்தமான முடிவை மண்டல ரயில்வே கோட்டம் எடுக்கும்.

டிடிஆர்-யில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை பதிவு செய்ததால் அவை மண்டல ரயில்வே அலுவலகத்தால் பரிசளிக்கப்படும். பிறகு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் பணத்தை திரும்பி தருவது அல்லது எவ்வளவு பணம் திரும்பி தருவது என்பதை மண்டல ரயில்வே அலுவலகம் முடிவு செய்யும். கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் பணம் திரும்பி தரப்பட மாட்டாது.

இந்த நிலையில் ஐ ஆர் சி டி சி தெரிவித்திருப்பது, ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்யாவிட்டாலோ அல்லது இணைய வழியாக டிடிஆர் தாக்கல் செய்யாவிட்டாலோ உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளில் பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - ‘ரயில் பயணங்களில்’!
Canceling train tickets!

ஆர்ஏசி டிக்கெட்டுகளில் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்துக் கொள்ளலாம். டிடிஆரை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com