5 லட்சம் வரை உள்ள கல்வி கட்டணத்தை யுபிஐ வழியாக செலுத்த ரிசர்வ் வங்கி அனுமதி!

ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி.

கல்வி கட்டணம் மற்றும் மருத்துவமனை கட்டணங்களை 5 லட்சம் ரூபாய் வரை யுபிஐ வழியாக பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகளின் சங்கங்களின் ஆதரிக்கப்பட்ட லாப நோக்கம் இல்லா நிறுவனமான இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனின் மின்னணு பண பரிவர்த்தனை சேவைக் கட்டண முறை தான் யுபிஐ எனப்படுகிறது. இது ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தரவு என்றும் அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
2,000 ரூபாய்க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு!
ரிசர்வ் வங்கி.

யுபிஐ எனப்படும் மின்னணு பரிவர்த்தனை வருகைக்குப் பிறகு ரொக்கப் பரிவர்த்தனையினுடைய அளவு பெருமளவில் குறைந்திருக்கிறது. குறிப்பாக சில்லறை வர்த்தக முதல் பெரிய அளவிலான வர்த்தகங்கள் வரை யு பி ஐ பயன்படுத்தப்பட்டு வருவதால் உடனுக்குடன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இது வேலையை மிகவும் எளிதாக்குவதோடு, விரைவாகவும் செய்ய வழி வகுத்து இருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்திய யுபிஐ பரிவர்த்தனை அடிக்கடி பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருப்பது, யுபிஐ பரிவர்த்தனையினுடைய தொடர் வளர்ச்சியின் காரணமாக கூடுதல் சிறப்புகள் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மருத்துவமனை மற்றும் கல்வி கட்டணம் செலுத்த ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே யு பி ஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்று இருந்த நடைமுறை தற்போது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. வருங்காலங்களில் மருத்துவமனை மற்றும் கல்வி கட்டணங்களின் தொகையை 5 லட்சம் ரூபாய் வரை யுபிஐ வழியாக பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சலுகை பயனாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பயனுடைய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com