கம்மி விலையில்... அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் 'Realme 16 Pro'

அசத்தலான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘Realme 16 Pro Plus’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Realme 16 Pro series launched today
Realme 16 Pro seriesimage credit: 91mobiles.com
Published on

உடனே வாங்க... ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro Plus) ஸ்மார்ட்போன் இன்று (ஜனவரி 6-ந்தேதி) மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்று வெளியாகும் ரியல்மி போனில் உள்ள சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்வோம்.

இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 16 Pro+ 5G) என மொத்தம் 2 மாடல்களை உள்ளடக்கிய Realme 16 Pro பிளஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது 200MP கேமராக்கள், பெரிய பேட்டரிகள், ஸ்னாப்டிராகன் செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Realme 16 Pro ஸ்மார்ட்போனை உடனே வாங்க...

Realme 16 Pro சீரிஸ் இதற்கு முன்பு வந்த மாடல்களை விட குறிப்பாக கேமரா செயல்திறன், பேட்டரி ஆயுள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிகரித்து வரும் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் விற்பனையை எதிர்கொள்ளும் வகையில் Realme 16 Pro சீரிஸ் பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட்கள் இந்த ஸ்மார்ட்போனிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 7 வரிசையில் இது மிகவும் சீரான செயல்பாடு கொண்டது. இது பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்பதால் உங்களது நேரமும் மிச்சமாகும். கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற வகையிலும், வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6.8 அங்குல முழு எச்.டி.பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள தொடுதிரையானது 2800x1280 பிக்சல்ஸ் ரெசல்யூசன், 1 மில்லியன் கலர்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) அம்சங்களை கொண்டிருக்கும். பயனர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் வகையில் திரை 144Hz திறன் கொண்டது.

இதையும் படியுங்கள்:
நவம்பர் மாதம் ரிலீஸாகும் டாப் 3 ஸ்மார்ட் போன்கள்!
Realme 16 Pro series launched today

200MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 50MP டெலிபோட்டோ சென்சார் போன்ற சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 50MP கேமராவும், பிரகாசமான LED பிளாஷ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

8GP ரேம் மற்றும் 128 GP நினைவகம், 12GP ரேம் மற்றும் 256GP நினைவகம் மற்றும் 16GP ரேம் மற்றும் 512GP நினைவகம் என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

7000mAh பேட்டரியுடன் தயாராகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி மூலமாக, விரைவாக சார்ஜ் செய்யலாம். அதுமட்டுமின்றி ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 9 மணிநேரத்திற்கு கேம் விளையாட முடியும் என்பது கேம் பிரியர்களுக்கு சிறப்பான தகவல்.

ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர்புகாத்தன்மைக்காக IP69 திறன் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
iQOO Neo 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுடச் சுட அறிமுகம்.
Realme 16 Pro series launched today

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை, புளூடூத், ஜி.பி.எஸ்., யூ.எஸ்.பி. டைப்-சி, என்.எப்.சி. உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன.

இதற்கிடையே அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 512 ஜி.பி. நினைவகம் கொண்ட ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.43,999 விலையிலும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட வேரியண்ட் தோராயமாக ரூ.35,000 விலையிலும் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அறிமுகமாகும் போது விலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த மொபைல் போன் Flipkart, சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் Realme ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

Realme 16 Pro ஸ்மார்ட்போனை உடனே வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com