முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Rise in egg prices.
Rise in egg prices.

வடமாநிலங்களில் நிலவு குளிர் காரணமாக முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டு, நாமக்கல் முட்டையின் விலை உயர்வை சந்தித்திருக்கிறது.

இந்தியாவின் மிக முக்கிய முட்டை உற்பத்தி நகரமாக திகழ்வது நாமக்கல். நாமக்கல்லில் தினசரி 5.5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. மேலும் இங்கிருந்து 30 சதவீத முட்டைகள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை உள்ளூர் மற்றும் பிற மாநில விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்காக 3 கோடி முட்டைகளை வாங்குகிறது.

இந்த நிலையில் எப்பொழுதும் சபரிமலை சீசன் காலமான கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் முட்டை விலை குறைவாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டு கடுமையான குளிர் காரணமாக வெளி மாநிலங்களில் முட்டை உற்பத்தி பெருமளவில் குறைந்து இருக்கிறது. இதனால் நாமக்கலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லப்படும் முட்டையின் அளவு அதிகரித்து இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் முட்டையின் எண்ணிக்கையில் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதையும் படியுங்கள்:
முட்டை இல்லாத வாழைப்பழ பிரட் ரெசிபி!
Rise in egg prices.

இதன் காரணமாக நவம்பர் மாதத்தில் பாதி தேதிகளில் 4. 75 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை, டிசம்பர் முதல் வாரத்தில் 6 ரூபாய் வரை உயர்ந்தது. மேலும் நாமக்கல்லில் செயல்படும் கோழிப் பண்ணைகளில் 5.80 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முட்டையின் விலை 7.50 ருபாய் வரை உயர்ந்து இருக்கிறது. இதனால் ஹோட்டல்கள், பேக்கரிகளில் உள்ள உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் ஜனவரி மாதம் இறுதி வரை இதே நிலை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com