நாளுக்கு நாள் தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் வெள்ளியின் விலை உயர்வான காரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. வெள்ளியில் பலரும் அதிக அளவில் முதலீடு செய்வதோடு தமிழ்நாட்டில் வெள்ளி கட்டிகள் தீர்ந்து விட்டதால் முன்பதிவு செய்து 10 நாட்கள் காத்திருந்து வாங்குவதால் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
2. பேட்டரி, சோலார் பேனல்கள், ஏரோநாட்டிக்கல் பொறியியல் என பல்வேறு துறைகளில் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் தொழில்துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளது.
3. வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் வெள்ளியின் தேவை அதிகரித்து விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
4. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தடுக்க வெள்ளி நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு விதித்த கட்டுப்பாடு மார்ச் 31ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் வெள்ளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
5. இறக்குமதி கொள்கையை உடனடியாக அமல்படுத்தும் வகையில், வெள்ளி இறக்குமதி இலவசம் என்பதில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளதாலும் வெள்ளியின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
6. வெள்ளி நகைகள் இறக்குமதி இல்லாததால், இப்போதுள்ள தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதாலும் வெள்ளியின் விலையில் மாறுபாடு காணப்படுகிறது.
7. வெள்ளியை மின்னணு வாகனங்களில் அதிகமாக பயன்படுத்துவதாலும், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்ந்து காணப்படுகிறது.
8. சர்வதேச சந்தையை பொறுத்தும் டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தாலும் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
9. தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஏதாவது முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் வெள்ளியில் முதலீடு செய்வதாலும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
வெள்ளியை முதலீட்டுக்காக வாங்குபவர்கள் தூய வெள்ளியைக் குறிக்கும் 99.9% அலகு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். 92.5% ஸ்டெர்லிங் வெள்ளி என்பது நகைகள் செய்ய சிறிதளவு தாமிரம் கலக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.